மலையாளம், தெலுங்கு திரை உலகில் நடித்த அசின் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். கடந்த 2004-ம் தேதி தமிழில் வெளியான எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் அறிமுகமானார். பின் சிவகாசி, போக்கிரி, வரலாறு, கஜினி உள்ளிட்ட படங்களில் நடித்தார். பின்னர் இவர் சூர்யாவுடன் நடித்த கஜினி படத்தின் இந்தி ரீமேக் படத்திலும் நடித்து இந்தி திரை உலகிலும் பிரபலமானார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2016 ஜனவரி 19-ம் தேதி நடிகை அசின் மற்றும் மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவை திருமணம் செய்துக்கொண்டனர். இந்த ஜோடிக்கு கடந்த அக்டோபர் 25-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது.


சில தினங்களுக்கு முன் நடிகை அசின் தனது இணையதளத்தில் குழந்தையின் கால் விரலில் மோதிரம் மாட்டியிருப்பதுபோல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். இப்படம் தற்போது வைரலானது.  


இதுகுறித்து அசின் இணையதளத்தில், திருமணம் முடிந்து 2 வருடம் ஆனது. இப்போது நாங்கள் மூவராக இருக்கிறோம். 3வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறோம். இதைவிட அதிகமாக வாழ்வில் வேறு எதுவும் எனக்கு தேவையில்லை' என குறிப்பிட்டுள்ளார்.