சங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர விநாயகரை வழிபட்டு சில சிறப்பு பரிகாரங்களை செய்வதன் மூலம் வாழ்க்கையில் வரும் பிரச்சனைகள் தீரும் என்று ஆன்மீக நூல்களில் கூறப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாழ்க்கையில் ஏற்படும் உடல்நலக் கோளாறுகள், பொருளாதார முன்னேற்றம் உட்பட பல வகையான பிரச்சனைகள் விலகி இன்பம் நிலவ சில எளிய பரிகாரங்கள் ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளன.


குடும்ப பிரச்சனைகள் தீர


 தனிப்பட்ட அல்லது குடும்ப பிரச்சனைகளில் இருந்து விடுபட, சங்கட ஹர சதுர்த்தி அன்று, விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றவும். தினமும் இப்படி செய்து வந்தாலும், விரைவில் பிரச்சனைகள் நீங்கும்.


வாழ்க்கையில் வெற்றி பெற


நீங்கள் எந்த ஒரு குறிப்பிட்ட வேலையிலும் வெற்றி பெற விரும்பினால், விக்னங்களை நீக்கும் விநாயகப் பெருமானை வணங்குங்கள். இது தவிர, வழிபாட்டின் போது, ​​அதர்வஷிர்ஷ  ஸ்தோத்திரத்தை கூறவும். கணபதி அதர்வஷீர்ஷ ஸ்தோத்திரம் அதர்வண வேதத்தின் முக்கிய ஸ்தோத்திரமாக கருதப்படுகிறது.


கடன் தொல்லை நீங்கி செல்வ செழிப்புடன் இருக்க


நிதி நிலைமை மேம்பட புதன் மிகவும் அனுகூலமான சிறப்பான நாள். பொருளாதார முன்னேற்றம் பெற, புதன்கிழமையன்று பிராமணருக்கு  பச்சை பயிறு தானம் செய்யுங்கள். ஆனால், ராகுகாலத்தில் தானம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும், ஒன்றரை கிலோகிராம் பச்சை பயிறை ஊறவைத்து  நெய் மற்றும் சர்க்கரை கலந்து காலை அல்லது மாலை பசுவிற்கு உணவாக கொடுக்கவும். இதனால் உங்கள் வருமானம் பெருகி மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கும்.


மேலும் படிக்க | அபூர்வ நிகழ்வு! 2022 ஏப்ரலில் 9 கிரகங்களும் ராசி மாறுவதால் ஏற்படும் பலன்கள்!


சிறந்த ஆரோக்கியத்துடன் திகழ


நல்ல ஆரோக்கியத்திற்காக, புதன் கிழமையன்று திருநங்கைகளுக்கு ஆடை தானம் செய்யுங்கள். தானமாக வழங்கும் துணியின் நிறம் பச்சையாக இருக்க வேண்டும். இது தவிர, முளை கட்டிய பச்சை பயிறையும் தானம் செய்ய வேண்டும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதனை உறுதிபடுத்தவில்லை.)


மேலும் படிக்க | இந்த 4 ராசிக்காரர்களும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவார்கள் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR