ராசி கற்களின் சக்திகளைப் பற்றி ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. எந்த ராசிகள் எந்த விதமான கற்கள் அணிந்தால் நல்லது, எந்த ராசிகள் எந்த விதமான கற்களை அணியக் கூடாது என கூறப்பட்டுள்ளது.  நவரத்தினத்தில் முத்து சந்திரனுடன் தொடர்புடையது. சந்திரன் மனதின் காரக கிரகம். அதனால் தான் சந்திரனின் தாக்கம் இருந்தால் மனநலப் பிரச்சனைகள் வருகின்றன. சந்திர கிரகத்தை வலுப்படுத்த முத்துக்களை அணிய அறிவுறுத்தப்படுவதற்கு இதுவே காரணம். ஜாதகத்தின் லக்னத்தில் உள்ள கிரகங்களின்படி சிலருக்கு முத்து அணிவது நன்மை தரும். ஆனால் சில ராசிக்காரர்கள் முத்து அணியக்கூடாது என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இதை பற்றி தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரிஷபம்


ரிஷப ராசியை வெள்ளி கிரகம் ஆட்சி செய்கிறது. எனவே இந்த ராசிக்காரர்கள் முத்து அணியக் கூடாது. ரிஷபம் ராசிக்காரர்கள் முத்துக்களை அணிந்தால் பொருளாதார பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதே சமயம் செலவும் அதிகரிக்கத் தொடங்கும். இதனால், நிதி நிலைமை பாதிக்கப்படலாம். குடும்ப உறுப்பினர்களுடன் பரஸ்பர கருத்து வேறுபடும் அதிகரிக்கத் தொடங்கலாம்.


மேலும் படிக்க| அக்டோபர் மாதம் இந்த ராசிகளுக்கு ராஜ யோகம், பண மழை பொழியும்: உங்க ராசி இதுவா? 


மிதுனம்


மிதுனம் புதன் கிரகத்தால் ஆளப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்த ராசிக்காரர்கள் முத்து அணியக்கூடாது. ஏனென்றால், இவர்கள் முத்து அணிவதால், வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்படும். மேலும், ஆரோக்கியத்தில் பாதகமான விளைவுகளும் உண்டாகலாம். இது தவிர, மன அழுத்தத்தால் பிரச்சனைகள் உண்டாகலாம்.


சிம்மம்


சிம்ம ராசிக்கு அதிபதி சூரிய பகவான். இந்த ராசிக்காரர்கள் முத்து அணியக் கூடாது என கூறப்படுகிறது. உண்மையில், சில சூழ்நிலைகளில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையிலான உறவு நன்றாக இருக்காது என்பதால், இந்த ராசிக்காரர்கள் முத்துக்களை அணிந்தால், திடீரென்று செலவுகள் அதிகரிக்க ஆரம்பிக்கும்.


தனுசு 


தனுசு ராசியின் அதிபதி வியாழன். குரு மற்றும் சந்திரன் இடையே பகை உணர்வு உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், இந்த ராசிக்காரர்கள் முத்து அணியக்கூடாது. தனுசு ராசிக்காரர்களுக்கு முத்து அணிவதால் விபத்துகள் ஏற்படலாம். இது தவிர வாழ்க்கையில் பல வகையான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது.


கும்பம்


கும்ப ராசிக்கு சனி ஆட்சி. சந்திரனுக்கும் சனிக்கும் உள்ள உறவு நன்றாக இல்லை. அத்தகைய சூழ்நிலையில், இந்த ராசிக்காரர்கள் முத்து அணியக்கூடாது. ஜாதகத்தில் சனி, சந்திரன் சேர்க்கை பாதிப்பை உண்டாக்கும் என்பதால் கும்ப ராசிக்காரர்கள் முத்து அணிவதை தவிர்க்க வேண்டும் என்பது ஐதீகம். கும்ப ராசிக்காரர்கள் முத்துக்களை அணிந்தால் உடல்நலக் கோளாறுகள் தொடங்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Mars Transit: மூன்றே வாரங்களில் 'இந்த' ராசிகளின் வாழ்க்கையில் பொற்காலம் தொடங்கும்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ