இந்தியாவில், குறிப்பாக தமிழ் நாட்டில் பெண்கள் பலர் மூக்குத்தியை அணிவது வழக்கம். இது உடலுக்கும் மனதிற்கும் பல ஆரோக்கியத்தை தருவதாக கூறப்படுகிறது. மூக்குத்தி அணிவது மன்னர் காலத்தில் வழக்கமாக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. தங்கத்தில் பெரிய வளையமாக போடப்பட்டிருந்த மூக்குத்திகள், தற்போது சுருங்கு கல் வைத்த மூக்குத்திகளாக மாறிவிட்டன. இதிலும் சிறிய வளையம், பெரிய வளையம், இரண்டு மூக்கிற்கும் இடையில் உள்ள காம்பில் போடும் வளையம் என பல டிசைன் மூக்குத்திகளும் வந்துவிட்டன. மூக்குத்திகள் போடுவதை பலர் தற்போது நாகரிகமாக பார்க்க ஆரம்பித்து விட்டனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா மட்டுமன்றி பல உலக நாடுகளை சேர்ந்தவர்களும் பாலின பாகுபாடு இல்லாது மூக்கு குத்தி கொள்கின்றனர். ஜோதிட ரீதியாக மூக்குத்தி அணிவதால் ஏற்படும் பலன்கள் என்ன? இங்கே பார்க்கலாம்.


மறைந்திருக்கும் வணிக நோக்கம்:


மூக்குத்தியை பெரும்பாலான பெண்கள் தங்கத்தில்தான் அணிவர். காரணம், வெள்ளி அல்லது வெண்கலத்தில் அணிந்தால் சீக்கிரமாக மூக்குத்தி கருத்து விடும். தங்க ஆபரணங்கள் அணிவதால் உடலில் ஆரோக்கியத்துக்குறிய பல விஷயங்கள் நடப்பதாக கூறப்படுகிறது. இதை தாண்டி, தங்கத்தை அதிகம் விற்க நகைக்கடையினர் ஏற்படுத்திய அட்சய திருதியை உள்ளிட்ட விழாக்களால் தங்க ஆபரணங்கள் அமோகமாக விற்பனை செய்யப்படுகின்றன. பலர், இதில் மூக்குத்தியும் வாங்கி செல்வர். இது, மூக்குத்தியை விற்பவர்களிடம் இருக்கும் வியாபார நோக்கமாகும். 


மூக்குத்தி அணிவதால் ஏற்படும் பலன்கள்:


மூக்குத்தி அணியும் பெண்களின் வாழ்வில் இருக்கும் ஆண்கள் அவர்களை நன்றாக பார்த்துக்கொள்வார்கள் என கூறப்படுகிறது. நல்ல சகோதரன், வாழ்க்கை துணை போன்றவர்கள் இவர்களது வாழ்வில் இருப்பார்களாம். அது மட்டுமன்றி, புராணங்களில், லட்சுமி தேவியின் அம்சமாக கருதப்படுகிறது மூக்குத்தி. மூக்குத்தி அணியும் பெண்களுக்கு லட்சுமியின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க | வீட்டில் இந்த 5 இடங்களில் கற்பூரம் ஏற்றினால் பணம் மழை கொட்டும்!


பெண்கள், இடது நாசியில் துளையிட்டு மூக்குத்தி அணிவதால் பல நன்மைகள் உருவாகுமாம். பெண்களின் இனப்பெருக்க உறுப்புகள், இடது பக்க நாசியுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, உடலியல் ரீதியாக மூக்கின் இடது பக்கம் மூக்குத்தி அணிவதால் கருப்பை மற்றும் பிற இனப்பெருக்க உறுப்புகளுடன் தொடருடைய நரம்புகள் வலுவடைவதாக கூறப்படுகிறது. மேலும், மாதவிடாய் பிரச்சனையுடன் இருக்கும் பெண்களுக்கு அந்த பிரச்சனை குறையவும் மூக்குத்தி வழி வகுக்குமாம். பிரசவத்தின் போது வலியை குறைக்கவும் இது உதவுவதாக கூறப்படுகிறது. 


ஜோதிட நன்மைகள்:


பெண்கள், அவர்களின் ஜாதகத்தில் சந்திரன் அல்லது புதன் ஆறாம் வீட்டில் இருந்தால், மூக்கு குத்துவது நல்லது என கூறப்படுகிறது. இதனால், ராசியில் உள்ள புதன் வலுப்பெறுமாம். ஜோதிட ரீதியாக நமது நாசி பகுதி குருவின் அம்சமாகவும் மூக்கின் முனை புதனை சார்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது. 


தங்கத்தில் மட்டும்தான் மூக்குத்தி அணிய வேண்டுமா..?


தங்க ஆபரணங்கள், குரு, சூரியன் மற்றும் செவ்வாய் போன்ற கிரகங்களின் தாக்கத்திற்கு நிவாரணம் தருவதாக பார்க்கப்படுகிறது. அதனால் தங்க மூக்குத்தி அனிவதால் இந்த கிரகங்களின் அருளை நாம் ஈர்க்கலாம். தங்கம் மட்டுமன்றி வெள்ளி அல்லது பிற உலோகங்களினால் செய்த மூக்குத்தியையும் அணியலாம். ஆனாலும் இவற்றும் தங்கத்தை பயன்படுத்துவது சிறந்ததாக பார்க்கப்படுகிறது. தங்கம் குரு மற்றும் செவ்வாயின் அருளாசி கிடக்கும் என்றும் கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | வைர நகைகளை யார் அணியக்கூடாது? மின்னும் வைரம் யாருக்கு தோஷமாகும்?


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ