மன்னிப்பு கேட்கிறவர் ராஜா என்றால், மன்னிப்பு கொடுக்கிறவன் மகராசன் என்பார்கள். ஆனால், சிலர் உதட்டளவில் மட்டுமே மன்னிப்பு கொடுத்துவிட்டு உட்பகையோடு சுற்றுவார்கள். அவர்களை பழக்கவழக்கத்தில் அடையாளம் கண்டுகொள்ளலாம் என்றாலும், அவர்களின் ராசி உங்களுக்கு தெரிந்தால், இந்த விஷயத்தில் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம். எந்த ராசிக்காரர்களெல்லாம் பகையை மனதில் வைத்திருப்பார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம்(Aries)


மேஷ ராசிக்காரர்கள் யாருடைய நட்பையும் எளிதில் துண்டிக்கக் கூடாது என்று நினைப்பார்கள். அதற்காக பிறர் செய்யும் தவறு மற்றும் தொந்தரவுகளை எளிதில் மன்னித்தாலும், அதனை மனதளவில் முழுமையாக மறக்காமல் இருப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரை தாங்கள் செய்வதுதான் சரி என்ற எண்ணத்தில் இருப்பார்கள் என்பதால், நீங்கள் செய்த தவறை மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். இதைபோல் மீண்டும் ஒருமுறை செய்துவிடாதே! எனக் குத்திக்காட்டிக்கொண்டே இருப்பார்கள்.


விருச்சிகம் (Scorpio)


மனித நேயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதன்படி நடக்கும் விருச்சிக (Scorpio) ராசிக்காரர்களுக்கு நீங்கள் ஏதேனும் தவறிழைந்திருந்தால், அவர்கள் மன்னிக்கும் வரை நீங்கள் தள்ளி இருப்பதே நல்லது. கொஞ்ச நாட்களில் மன்னித்துவிடுவார்கள் என்றாலும், நீங்கள் அவர்களுக்கு செய்த தவறுக்காக மன வருத்தம் கொண்டிருப்பார்கள். அசிங்கமான வார்த்தைகளில் கோபத்தை வெளிப்படுத்தமாட்டார்கள். மாறாக, முக பாவணைகளில் வெளிக்காட்டிவிடுவார்கள். 


ALSO READ:2022 Rasipalan: இந்த 5 ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை அமோகமாக இருக்கும்


தனுசு( Sagittarius)


தங்களுக்கு பிறர் செய்த தவறுகளை மனதளவில் மன்னிக்கும் குணாதிசயம் உடையவர்கள். ஆனால், அவர்களுக்கு ஏற்பட்ட அந்த கசப்பான சூழ்நிலைகளையும், மனிதர்களையும் மறக்கமாட்டர்கள். அவர்களின் சிறப்பு என்னவென்றால், அந்த கசப்பான சூழ்நிலையை அடிக்கடி ஞாபகப்படுத்திக்கொள்ளமாட்டார்கள். நெருங்கிய நண்பர்களுக்கு அல்லது காதலர்களுக்கு மட்டுமல்ல, யார் அப்படியான கசப்பான அனுபவத்தை கொடுத்திருந்தாலும், அனைவரிடமும் இதே பாங்கையே கடைபிடிப்பார்கள்.


மகரம் (Capricorn)


இவர்களைப் பொறுத்தவரை, தங்களுக்கு பிறர் செய்த கசப்பான அனுபவத்தை அவ்வளவு எளிதாக மன்னிக்கமாட்டார்கள். மகர  (Capricorn) ராசிக்காரர்கள் பிறரை மன்னிக்க குறிப்பிட்ட கால நேரத்தை எடுத்துக் கொள்வார்கள். அது 2 மாதம் அல்லது இரண்டு வருடமாகக்கூட இருக்கலாம். உங்கள் உறவில் ஏற்பட்ட விரிசலுக்கான சூழல், மகர ராசிக்கார்களுடன் நட்பில் இருக்கும் வரை உங்களால் மறக்க முடியாது. ஏதாவதொரு வழியில் நீங்கள் அதனை நினைத்து பார்க்கும்படியான நிலை இருந்து கொண்டே இருக்கும்.


மீனம் (Pisces )


உட்பகை வைத்திருப்பவர்களின் லிஸ்டில் முதன்மையான இடத்தில் இருப்பவர்கள் மீன (Pisces) ராசிக்காரர்கள். எந்த ராசிக்காரர்களும் மீன ராசிக்காரர்களின் இந்த குணாதிசயத்திற்கு ஈடு இணையாக வர முடியாது. தங்கள் வாழ்நாள் முழுவதும் பகையை மனதில் வைத்திருக்கக்கூடிய ஒரே ராசிக்காரர்கள் மீன ராசிக்காரர்கள். ஒரு சில இடங்களில் மன்னித்திருந்தாலும், அதனை எப்போதும் மறக்கமாட்டார்கள். மற்றவர்கள் தங்களுக்கு செய்த பிரச்சனையை மறந்ததுபோல் ஒருநாளும் மீன ராசிக்காரர்கள் வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்கள். அதனால், சில சந்தர்ப்பங்களில் மீன ராசிக்காரர்கள் பேசும் வார்த்தைகள் உங்களை அசௌகரியமாக்கும்.


ALSO READ: ஹனுமனின் அருளால், இந்த ராசிக்காரர்களுக்கு வருமானம் அமோகமாக இருக்கும்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR