ஹனுமனின் அருளால், இந்த ராசிக்காரர்களுக்கு வருமானம் அமோகமாக இருக்கும்!

கடின உழைப்பின் காரணமாக, கஷ்டங்களை சமாளிப்பீர்கள். சொத்து சம்பந்தமான முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையலாம். உங்கள் வருமானத்தை எச்சரிக்கையுடன் செலவிடுங்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 23, 2021, 08:02 AM IST
  • இந்த நாள் இனிதாகட்டும்
  • அதிகாரிகள் உங்களைப் பாராட்டுவார்கள்
  • வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்
ஹனுமனின் அருளால், இந்த ராசிக்காரர்களுக்கு வருமானம் அமோகமாக இருக்கும்! title=

கோள்கள் மற்றும் விண்மீன்கள் எப்போதும் தங்கள் நிலையை மாற்றிக்கொண்டே இருக்கும். அவை நம் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஜோதிட சாஸ்திரத்தின் படி, நமது ஜாதகத்தில் எந்த கிரகம்-நட்சத்திரம் எந்த வீட்டிற்கு செல்கிறது என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம், ஏனெனில் அவை நம் வாழ்க்கையை பாதிக்கின்றன. கிரகங்களின் இயக்கம் மாறி வருவதால் ஒவ்வொரு நாளும் முந்தைய நாளை விட வித்தியாசமாக இருக்கிறது. சில சமயம் வெற்றியும், சில சமயம் ஏமாற்றமும் அடைகிறோம். இன்று உங்கள் நாள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்: இன்று நீங்கள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். அதிர்ஷ்டம் உங்களுடன் உள்ளது. பணியில் உற்சாகம் இருக்கும். மாணவர்கள் போட்டித் துறையில் வெற்றி பெறுவார்கள். இன்று நீங்கள் நீண்ட நாள் நண்பர் அல்லது அன்புக்குரியவரை சந்திப்பீர்கள்.  இதன் காரணமாக உங்கள் முகத்தில் மகிழ்ச்சி பிரதிபலிக்கும்.

ரிஷபம்: இன்று உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். உங்களின் புத்திசாலித்தனம் மற்றும் பணியில் ஈடுபாடு அதிகாரிகளால் பாராட்டப்படும். பல சிறிய முதலீடுகள் எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். கூட்டுத் தொழிலில் முக்கிய முடிவு எடுக்க வேண்டாம். பெண்கள் இன்று வீட்டு வேலைகளில் மும்முரமாக இருப்பார்கள்.

மிதுனம்: இன்று அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும். இன்று வேலையில் உங்கள் செயல்திறன் சிறப்பாக இருக்கும். எந்தத் துறையிலும் உங்களை வெற்றியின் உச்சத்திற்கு அழைத்துச் செல்ல உதவும் பேச்சுக் கலை உங்களிடம் உள்ளது. முன்னேற்றம் காண கடினமாக உழைப்பீர்கள்.

கடகம்: இன்று நீங்கள் உங்கள் மனதை ஒருமுகப்படுத்த முயற்சிக்க வேண்டும். நிதி ரீதியாக நீங்கள் வலுவாக உணருவீர்கள். விவேகத்துடன் வேலை செய்யுங்கள். சிரமங்கள் தீரும். இளைஞர்கள் தொழிலில் பெரிய வெற்றியைப் பெறலாம். அரசியல் விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக தீர்க்கப்படும்.

ALSO READ: Horoscope November 22, 2021: சண்டை போட்டே பாடாய்படுத்தும் ராசி இவர்கள் தான்

சிம்மம்: இன்றைய நாள் தன்னம்பிக்கை நிறைந்த நாளாக இருக்கும். கடின உழைப்பின் வலிமையால், நீங்கள் கஷ்டங்களை சமாளிப்பீர்கள். சொத்து சம்பந்தமான முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையலாம். உங்கள் வருமானத்தை எச்சரிக்கையுடன் செலவிடுங்கள். குடும்பத்தில் உள்ள அனைவரையும் அரவணைத்து செல்ல முயற்சிப்பீர்கள். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள்.

கன்னி: இன்று அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும். சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். உங்கள் பேச்சு இனிமையாக இருக்கும். இதன் காரணமாக மற்றவர்களை உங்கள் பக்கம் ஈர்ப்பீர்கள். பணிபுரியும் துறையில் வெற்றி பெறுவீர்கள்.

துலாம்: இன்று உங்கள் முடிவுகளை, விருப்பங்களை மற்றவர்கள் மீது திணிக்க வேண்டாம். நிர்வாகம் தொடர்பான பணிகள் எளிதாக நடைபெறும். தற்போதைய சூழ்நிலையால் வணிக நடவடிக்கைகள் பலவீனமாக இருக்கும். நல்லவர்களுடன் உறவுகள் உருவாகும். உங்களின்பெயரும் புகழும் உயரும்.

விருச்சிகம்: இன்று மனம் மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இன்று உங்களுக்கு நல்ல தொடக்கமாக இருக்கும். கையில் எடுக்கும் எந்தப் பணியிலும் வெற்றி பெறுவீர்கள்.

தனுசு: நாளின் ஆரம்பம் நன்றாக இருக்கும். இன்று வேலை அல்லது குடும்ப மகிழ்ச்சிக்கு ஏற்ற நல்ல நாளாக இருக்கும். இன்று வணிக வர்க்கம் குறிப்பாக நல்ல பலன்களை பெறுவார்கள். இதன் காரணமாக பணமும் லாபமும் கிடைக்கும். உங்கள் பணித் துறையில் பெரிய மாற்றம் ஏற்படலாம்.

மகரம்: இன்று உங்கள் ஆரோக்கியம் மேம்படும் . உங்கள் வீட்டில் தங்கி பெரும்பாலான வேலைகளை முடிக்க முயற்சி செய்யுங்கள். வணிகர்களுக்கு நேரம் கடினமாக இருக்கலாம், ஆனால் சோர்வடைய வேண்டாம். உத்தியோகஸ்தர்கள் உங்கள் வேலையைப் பார்த்து பாராட்டுவார்கள். உறவினர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும்.

கும்பம்: இன்று வேலை மெதுவாக நடக்கும். வியாபாரத்தில் அனுகூலமான லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வணிகர்கள் பெரிய முதலீடுகளைத் தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உற்றார் உறவினர்களை சந்திப்பீர்கள்.

மீனம்: இன்று உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை. தொழில் வாழ்க்கையில் சூழ்நிலைகள் உங்கள் விருப்பப்படி அமையும். உங்களின் வியாபாரத்தில் சில வேலைகள் நீண்ட நாட்களாக முடங்கிக் கிடக்கின்றன என்றால் இன்றே முடிக்க நிலைமை சாதகமாக அமையும். நண்பர்களிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவது எளிதாக இருக்கும்.

ALSO READ:Personality By Zodiac Sign: இந்த 4 ராசி ஆண்களும் அற்புதமான கணவர்களாக இருப்பார்கள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News