ATM Cash Withdrawal: இனி பணம் எடுக்க அதிகம் செலவாகும், புதிய கட்டணங்கள் இதோ
2022 ஆம் ஆண்டு முதல் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பதற்கு அதிக செலவாகும் என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.
புதுடெல்லி: 2021 ஆம் ஆண்டு முடிவடைய உள்ளது. இந்த ஆண்டு பணவீக்கம் பல புதிய உச்சங்களைத் தொட்டுள்ளது. புதிய ஆண்டின் துவக்கமும் பணவீக்கத்துடனேயேதான் இருக்கிறது.
2022 ஆம் ஆண்டு முதல் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பதற்கு அதிக செலவாகும் என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும். ஜனவரி 1 முதல் இலவச ஏடிஎம் பரிவர்த்தனை (ATM Transaction) வரம்பை மீறினால், ஏடிஎம் பயனர்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.
ஜனவரி 1, 2022 முதல் இலவச மாதாந்திர வரம்பைத் தாண்டி பணம் மற்றும் பணமில்லா ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்களை அதிகரிக்க ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, ஆக்சிஸ் வங்கி அல்லது பிற வங்கிகளின் ஏடிஎம்களில் இலவச வரம்பை விட அதிகமான நிதி பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் ரூ.21 மற்றும் ஜிஎஸ்டியாக (Rs.21 Plus GST) இருக்கும் என்று ஆக்சிஸ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த திருத்தப்பட்ட கட்டணங்கள் ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வரும்.
ALSO READ | Rules Change: மாறும் விதிகள்! புத்தாண்டில் தபால் நிலைய வங்கியின் கட்டணங்கள் உயர்கிறது
அடுத்த மாதம் முதல் கட்டணம் எவ்வளவு உயரும்
இதுவரை, இலவச பரிவர்த்தனைகளின் மாதாந்திர வரம்பை கடந்தால், வாடிக்கையாளர்கள் ரூ.20 செலுத்த வேண்டி இருந்தது. அடுத்த மாதம் முதல், ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.21 மற்றும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி (RBI) ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. வங்கிகளின் அதிக பரிமாற்றக் கட்டணங்களுக்கு ஈடுசெய்யும் வகையில் வங்கிகள் பொதுச் செலவை உயர்த்தியுள்ளன. எனவே, ஒரு பரிவர்த்தனைக்கான கட்டணத்தை ரூ.21 ஆக உயர்த்த வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் 5 பரிவர்த்தனைகளை இலவசமாக செய்யலாம்
வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிகளின் ஏடிஎம்களில் இருந்து ஐந்து இலவச பரிவர்த்தனைகள் செய்ய அனுமதி உள்ளது. இதில் நிதி மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகள் அடங்கும். மெட்ரோ நகரங்களில் உள்ள, சொந்த வங்கி அல்லாத மற்ற வங்கிகளின் ஏடிஎம்-களில் 3 இலவச பரிவர்த்தனைகளும், மெட்ரோ அல்லாத மையங்களில் 5 பரிவர்த்தனைகளும் செய்ய வாடிக்கையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ALSO READ | ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த கட்டணத்தை அதிகரித்தது வங்கி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR