புதிய ஓய்வூதிய திட்டத்தில் (NPS) உங்களுக்கு அகௌண்ட் இருந்தால், உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. பழைய கணக்குகளின் OTP அடிப்படையிலான அங்கீகாரத்தை PFRDA தொடங்கியுள்ளது. ஆனால் இதற்கு மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை வழங்க வேண்டியது அவசியமாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விவரங்களை விரைவில் புதுப்பிக்கவும்


பதிவு செய்யும் நேரத்தில் இந்த இரண்டு விவரங்களையும் நீங்கள் கொடுக்கவில்லை என்றால், அவற்றை இப்போது கண்டிப்பாக அகௌண்டில் அப்டேட் செய்து அகௌண்டை புதுப்பிக்க வேண்டும். வேறு ஏதேனும் மாற்றம் இருந்தால், அதைப் புதுப்பிப்பதும் அவசியம். அவ்வாறு செய்யத் தவறினால், சென்ட்ரல் ரெக்கார்ட் கீப்பிங் ஏஜென்சிகளிடம் (CRA கள்) உள்ள உங்கள் ஆவணங்கள் புதுப்பிக்கப்படாமல் இருந்துவிடும்.


பழைய என்.பி.எஸ் கணக்குகளின் சரிபார்ப்பு


PFRDA தனது சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் நகல் ஜீ பிசினஸிடம் உள்ளது. புதிய கணக்குகள் OTP மூலம் மட்டுமே திறக்கப்படும் என்றும் பழைய கணக்குகளின் சரிபார்ப்பு OTP மூலம் செய்யப்பட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. NPS-ல் முதலீடு செய்தால் பிரிவு 80CCD-யின் கீழ் வரி விலக்கு கிடைக்கும்.


ALSO READ: நூறு ரூபாய்க்கும் குறைவான 2 புதிய திட்டங்களை அறிமுகம் செய்த வோடபோன்!!


NPS கணக்கை இவ்வகையில் திறக்கவும்


புதிய நபர்கள் அகௌண்டைத் திறக்க Kyc-க்கான (உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்) எந்த ஆவணங்களையும் வழங்க வேண்டியதில்லை. ஆஃப்லைன் ஆதாரைக் கொண்டு அகௌண்டை திறந்து விடலாம். அதன் நகலும் வழங்கத் தேவையில்லை. சாத்தியமான பங்குதாரர்களின் சம்மதத்துடன் ஆஃப்லைன் ஆதார் மூலம் என்.பி.எஸ் கணக்கைத் திறக்க பி.எஃப்.டி.ஏ ஏற்கனவே ஈ-என்.பி.எஸ் / பாயிண்ட் ஆஃப் ப்ரெசன்ஸ் மையங்களை அனுமதித்துள்ளது.


தேவை ஏன் எழுந்தது


PFRDA -வின் படி, NPS கணக்குகளில் மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண் ஒரே மாதிரியாக இல்லையா என்பதை சி.ஆர்.ஏக்கள் சரிபார்க்க வேண்டும் என்பதே நோக்கம்.


ALSO READ: Indian Railways டிக்கெட் புக்கிங் விதிகளில் பெரிய மாற்றம்: விவரம் உள்ளே


OTP அங்கீகாரத்தைப் பெறுங்கள்


eNPS-ன் இணையதளத்தில் முதலில் உள்நுழையவும். National Pension Scheme-ஐ கிளிக் செய்யவும். பதிவு பொத்தானை அழுத்தவும். OTP Authentication / eSign ஐக் கிளிக் செய்யவும். Acknowledgement No., Acknowledgement Date, Date of Birth, First Name, Date of Birth மற்றும் Email Address ஆகிய தகவல்களை அளிக்கவும். அதன் பிறகு OTP பொத்தான் வரும். Generate OTP பொத்தானைக் கிளிக் செய்யவும். மொபைல் மற்றும் மின்னஞ்சலில் இரண்டு தனித்தனி OTP கள் வரும். இந்த இரண்டையும் பூர்த்தி செய்த பிறகு, செயல்முறை முடிவடையும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR