அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலிவுட் பிரபலங்களான ஷாருக்கான், ரன்வீர் சிங் போன்றவர்களுக்கு அனந்த் அம்பானி திருமணப் பரிசாக ரூ. 2 கோடி மதிப்புள்ள வாட்ச்களை வழங்கி ஆச்சரியப்படுத்தி உள்ளார். மும்பையில் முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானியின் திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. ஜூலை 12 ஆம் தேதி நடைபெற்ற அனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட், கிருதி சனோன், ரஜினிகாந்த், அனன்யா பாண்டே, ஷனாயா கபூர், ஐஸ்வர்யா ராய், வருண் தவான், ரன்வீர் சிங், அனில் கபூர், அட்லீ, சூர்யா, யாஷ், ஹர்திக் பாண்டியா, பும்ரா போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இஷா அம்பானி vs நிதா அம்பானி... பாரம்பரிய காஸ்ட்யூமில் போட்டிப்போடும் தாயும் மகளும்!



மிக பிரமாண்டமாக நடைபெற்ற இந்த திருமண விழாவில் பல ஆச்சரியமளிக்கும் விஷயங்கள் நடைபெற்றுள்ளது. திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு 2 கோடி மதிப்புள்ள Audemars Piguet வாட்ச் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இந்த வாட்சின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இதனை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். இந்த குறிப்பிடத்தக்க அன்பு பரிசு அம்பானி திருமணத்தின் பிரம்மாண்டத்தின் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. தங்க நிறத்தில் மின்னும் வாட்ச் பார்க்கும் போதே நமது கண்களை ஈர்க்கிறது. இந்த வாட்சில் தேதி, மாதம், வருடம், வானிலை நிலவரம், லீப் ஆண்டு, நொடிகள், நிமிடங்கள் என அனைத்தையும் பார்த்து கொள்ள முடியும்.


அனந்த் அம்பானியின் நெருங்கிய பாலிவுட் பிரபலங்கள் 25 பேருக்கு இந்த 2 கோடி மதிப்புள்ள வாட்ச் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் தொடங்கிய இவர்களது திருமண ஏற்பாடுகள் ஜூலை 12ம் தேதி வரை நடைபெற்றது. அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்தின் மொத்த செலவு சுமார் இந்திய மதிப்பில் ரூ. 5,000 கோடி இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது முகேஷ் அம்பானியின் மதிப்பில் 0.5% மட்டுமே என்றும் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் ரூ. 1,000 முதல் ரூ. 2,000 கோடி வரை செலவு செய்ய திட்டமிட்டு இருந்ததாகவும், ஆனால் செலவு ரூ. 5,000 கோடி ஆகியுள்ளது என்றும் கூறப்படுகிறது.


இந்தியாவில் உள்ள முக்கிய பிரபலங்கள் மட்டுமின்றி, இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், கிம் கர்தாஷியன், சாம்சங் தலைமை நிர்வாக அதிகாரி ஹான் ஜான் உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள முக்கிய தலைவர்களும் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். கடந்த ஒரு வாரமாக மும்பையில் கனமழை பெய்து வந்த நிலையில், திருமணத்திற்கு வரும் விருந்தினர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் திருமணம் நடைபெறும் இடத்தை சுற்றிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.


மேலும் படிக்க | அம்பானிகளிடம் கற்றுக் கொள்ள வேண்டிய 6 சீக்ரெட்ஸ்...! வாழ்க்கை சும்மா அம்சமா இருக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ