ராகு கேது பெயர்ச்சி: ராகு-கேதுவின் பெயர்ச்சி அனைவரது வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த கிரகங்கள் ஒன்றாக ராசியை மாற்றும். மேலும் இவை இரண்டும் எப்போதும் வக்ரமாக, அதாவது தலைகீழ் இயக்கத்திலேயே பயணிக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில் இந்த இரண்டு கிரகங்களும் ராசியை மாற்றியுள்ளன. இவை 2023 வரை இந்த நிலையில் இருக்கும். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். தற்போது ராகு மேஷ ராசியிலும், கேது துலாம் ராசியிலும் உள்ளனர். இந்நிலையில் 3 ராசிக்காரர்களுக்கு ராகு-கேது மிகவும் சுப பலன்களைத் தருவார்கள். இதற்குப் பிறகு 2023 அக்டோபரில் ராகு-கேதுவின் நிலையில் மாற்றம் ஏற்படும். அதுவரை இந்த 3 ராசிக்காரர்களுக்கும் அனுகூலமான காலமாக இருக்கும். 


ராகு-கேது அளிக்கும் நன்மைகளால் வாழ்க்கை பிரகாசிக்கும்
ராகு-கேதுவால் நல்ல பலன்களைப் பெற, இந்த கிரகங்களுக்கு உகந்த பொருட்களை தானம் செய்ய வேண்டும். இது தவிர, நாய்க்கு உணவளிப்பது, விலங்குகளுடன் பாசமாக இருப்பது ஆகியவை நன்மை அளிக்கும். இதன் மூலம் ஜாதகத்தில் ராகு-கேது வலுப்பெற்று சுப பலன்களைத் தரத் தொடங்குகிறார்கள். இது தவிர போதை மருந்து மற்றும் அசைவ உணவுகளை தவிர்க்கவும்.


மேலும் படிக்க | குருவின் அருளால் அடுத்த 7 மாதங்களுக்கு மகிழ்ச்சி கடலில் நீந்தப்போகும் 5 ராசிகள்  


ரிஷபம்: 
ரிஷப ராசிக்காரர்களுக்கு ராகு கிரகத்தின் நிலை மாற்றம் மிகவும் சாதகமாகும். இந்த நேரத்தில் அவர்களது தொழிலில் பல முன்னேற்றங்கள் ஏற்படும். பண வரவு சாதகமாக இருக்கும். புதிய வழிகளில் பணம் வரும். பணியிடத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கள். அரசியலில் மும்முரமாக இருப்பவர்களுக்கு இந்த நேரத்தில் ஒன்றன்பின் ஒன்றாக வெற்றியும் கவுரமமும் தேடி வரும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் உள்ளது.


மிதுனம்: 
மிதுன ராசிக்காரர்களுக்கு 2023 வரை ராகு-கேது பல நல்ல பலன்களை அள்ளித் தருவார்கள். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். அனைத்து செயல்களிலும் வெற்றி பெறுவீர்கள். உங்கள் ஆளுமை மேம்படும், கௌரவம் அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும். பெரிய பதவி கிடைக்கலாம். மொத்தத்தில், இந்த நேரம் பயனுள்ளதாக இருக்கும்.


கடகம்: 
கடக ராசிக்காரர்களுக்கு அக்டோபர் 2023 வரை ராகு நல்ல பலன்களைத் தருவார். இவர்களுக்கு பல இடங்களிலிருந்து அனுகூலமான செய்திகள் வந்து சேரும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கக்கூடும். வேலையில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு ஆகியவை கிடைக்கும். சமூகத் துறையில் செயல்படுபவர்கள் பெரிய பதவியைப் பெறலாம். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். செல்வமும் பெருகும். புதிய வீடு, வாகனம் வாங்கலாம்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Weekly Horoscope: மேஷ ராசிக்காரர்கள் உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்கவும் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR