சனி பெயர்ச்சி 2022: எந்த ராசிக்கு சூப்பரா இருக்கும் தெரியுமா
ஜோதிடத்தில் 9 கிரகங்கள் மற்றும் 12 ராசிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஜோதிடத்தின்படி, சனிபகவான் ஒருவரின் ஜாதகத்தில் கருணை காட்டினால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் என்பார்கள்.
புதுடெல்லி: ஜோதிடத்தில் 9 கிரகங்கள் மற்றும் 12 ராசிகள் உள்ளன. ஜோதிடத்தில், சனி கர்மாவை அளிப்பவர் என்று கூறப்படுகிறது. சனி தேவன் தனது ராசியை மாற்றும்போது, சனியின் தசை அல்லது ஏழரை நாட்டு சனி ஏற்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சனியின் சஞ்சாரம் எப்போது மாறும், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சனி தசை மற்றும் ஏழரை நாட்டு சனியில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பதை பார்போம்.
இந்த ராசிக்காரர்கள் ஏழரை நாட்டு சனி மற்றும் சனி தசையில் இருந்து விடுபடுவார்கள்
சனி பகவான் விரைவில் ராசி மாறப் போகிறார். ஜோதிட சாஸ்திரப்படி ஏப்ரல் 29ம் தேதி சனிபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்குள் நுழைகிறார். சனியின் ராசி மாற்றத்தால் சில ராசிகளில் சனி தசையும், ஏழரை நாட்டு சனியும் தொடங்கும். அதே சமயம் சில ராசிக்காரர்கள் அதன் பலனில் இருந்து விடுபடுவார்கள். இந்த சனியின் ராசி மாற்றத்தால் தனுசு ராசியில் இருந்து ஏழரை நாட்டு சனி நீங்கும். இதன் மூலம் மிதுனம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் சனி தசையிலிருந்து விடுபடுவார்கள்.
ALSO READ | Luky Zodiacs: அடுத்த 30 நாட்களுக்கு பொன்னான வாய்ப்பு பெறும் 5 ராசிக்காரர்கள்!
சனியின் தசா இந்த 3 ராசிகளிலும் இருக்கும்
இருப்பினும், ஜூலை 12 ஆம் தேதி, சனியின் வக்ர நகர்வு மீண்டும் மகர ராசியில் ஏற்படுகிறது. இதன் காரணமாக மிதுனம், துலாம் மற்றும் தனுசு ராசிகளில் சனி தசையில் தொடங்கும். இந்த 3 ராசிக்காரர்களும் 2023ல் சனி தசையில் இருந்து விடுதலை பெறுவார்கள்.
ALSO READ | சுக்ரனின் இடமாற்றத்தால், சில ராசிகளுக்கு கொண்டாட்டம், சிலருக்கு திண்டாட்டம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR