Lucky Zodiacs: அடுத்த 30 நாட்களுக்கு பொன்னான வாய்ப்பு பெறும் 5 ராசிக்காரர்கள்!

இந்த 5 ராசிக்காரர்களுக்கு அடுத்த 30 நாட்கள் மிகவும் அற்புதமாக இருக்கும், அதிர்ஷ்டத்தின் தங்கக் கரத்தால் வாழ்க்கையை பொன்னாக்கும் ராசிக்காரர்கள்... 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 2, 2022, 05:55 AM IST
Lucky Zodiacs: அடுத்த 30 நாட்களுக்கு பொன்னான வாய்ப்பு பெறும் 5 ராசிக்காரர்கள்!  title=

புதுடெல்லி: கிரகங்களின் நிலையில் பல முக்கிய மாற்றங்கள் இந்த மாதம் நிகழவுள்ளன. ஜனவரி 15 முதல், புதன் கிரகம் மகர ராசியில் வக்ர கதியில் பயணித்தது. சூரியனுக்கு மிக அருகில் உள்ள புதன் கிரகம் பிப்ரவரி 4 முதல் நேராக நகரத் தொடங்கும். 

புத்திசாலித்தனம், தகவல் தொடர்பு, வணிகம், பணம், புதனின் மாற்றத்திற்கு காரணமான புதன் கிரகம், மக்களின் வாழ்க்கை தொடர்பான அனைத்து அம்சங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. 

அதிலும், தற்போதைய புதனின் நேரடி சஞ்சாரம், 5 ராசிக்காரர்களுக்கு அருமையான பலன்களைத் தரும். வரும் மார்ச் 6ம் தேதி வரை மகர ராசியில் சஞ்சரிக்கும் புதன் கிரகம், பிறகு  கும்ப ராசிக்குள் பிரவேசிக்கும்.

ALSO READ | புதனின் சிறப்பு அருளால் சகல செல்வங்களையும் பெறும் ‘2’ ராசிகள்!

இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்
பிப்ரவரி 4 முதல் புதனின் சஞ்சாரம் 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு மார்ச் 6 வரை அபரிமிதமான பலன்களைத் தருவார் புதன் பகவான்.

மேஷம் – புதனின் சஞ்சாரம், மேஷ ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். தொழில்-வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பணம் மற்றும் பொருளாதார நிலை மேம்படும். சிரமங்கள் நீங்கும்.

ரிஷபம்: புதன் சஞ்சாரம், ரிஷப ராசிக்காரர்களுக்கு சுபத்தைக் கொடுக்கும். பேச்சு மற்றும் தகவல் தொடர்பு தொழிலில் இருப்பவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் வந்து குவியும். தொழிலில் ரிஷபக் காரர்களின் பேச்சு பலன் தரும். பயணங்கள் சாதகமாக இருக்கும்.

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த புதன் சஞ்சாரம் செல்வத்தையும் செழிப்பையும் அதிகரிக்கும். இனிமையாகப் பேசுவதன் மூலம் பல காரியங்களைச் சாதிக்கலாம். நல்ல பேச்சு தொழிலில் லாபம் தரும். பொருளாதார நன்மைகள் உண்டாகும்.

ALSO READ | இன்றும் தொடரும் தை அமாவாசை தர்பணம்! காரணம் இதுதான்

மகரம் - இந்த ராசியில் நீச்சம் பெற்றுக்கும் புதனின் சஞ்சாரம், மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்லதாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரும் பலன்களைப் பெறுவார்கள். முன்னேற்றத்திற்கான முட்டுக்கட்டைகள் அகலும், வருமானமும் அதிகரிக்கும்.

மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு புதனின் நேரடி சஞ்சாரம் தொழிலில் நன்மைகளை தரும். கௌரவம் கூடும், பதவி உயர்வும் கிடைக்கும். வருமானம் கூடும். முதலீடு மூலம் லாபம் உண்டாகும். பயணங்கள் அதிகரிக்கும், அவை லாபகரமானதாக இருக்கும்.  

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

ALSO READ | கஜமுகன் கணபதி முழுமுதற் கடவுளான வரலாறு 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News