கடனால் வாழ்க்கையே தொலைந்து போச்சா? இதை ஒருமுறை செஞ்சு பாருங்க
Debt free pariharam : கட்ட முடியாத கடனால் தவித்துக் கொண்டிருப்பவர்கள், கடன் தொல்லையில் இருந்து விடுபட நினைத்தால் இந்த பரிகாரங்களை ஒருமுறை செய்து பாருங்கள்.
ஒவ்வொரு ஊரிலும் கடன் இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். கடனால் சந்திக்கும் இன்னல்களை காது கொடுத்து கேட்டால் தெருவுக்கு நூறு கதைகள் இருக்கும். கடன்பட்டவர்களின் அழுகுரல்களை கேட்க காதுகள் தான் இல்லை. உங்களுக்கும் கடன் இருந்து, மனம் நொந்து வேதனையின் உச்சத்தில் இருக்கிறீர்கள், அந்த வேதனை நிரந்தரமாக நீங்க சில எளிய பரிகாரங்களை செய்து பாருங்கள். நம்பிக்கை தான் இந்த வாழ்க்கை. அதனால் இதையும் ஒருமுறை முயற்சி செய்து பார்த்தால் கடன் தொல்லையில் இருந்து விடுபட உங்களுக்கு ஏதேனும் ஒரு நிவாரணம் கிடைக்கலாம்.
புனுகு மந்திரம்
புனுகு என்ற ஒன்று இருக்கிறது. அது நாட்டு மருந்து கடைகளில் கேட்டால் கிடைக்கும். இதனை வாங்கி வளர்பிறை தினத்தில் ஒரு ரூபாய் தாளில் தேய்த்து கடன் கொடுத்தவரிடம் கொடுக்கவும். இதனால், உங்களால் அவருக்கு கிடைக்கும் பண வருவாய் நின்றுவிடும் யோகம் உங்களுக்கு கிடைக்கும். அதாவது, உங்களுக்கு ஏதேனும் ஒரு வழியில் வருவாய் கிடைத்து அவரிடம் வாங்கிய கடனை சீக்கிரம் அடைத்துவிடுவீர்கள். அவரும் ஏமாறமாட்டார், நீங்களும் ஏமாற்றமாட்டீர்கள். இருவருமே பணம் கொடுக்கல் வாங்கலில் இருக்கும் மன சங்கடம் நீங்கி சீக்கிரம் மன மகிழ்ச்சியாக சந்தித்துக் கொள்வீர்கள். கடன் தொல்லையில் இருந்து விடுபட இது ஒரு பரிகாரம், நம்பிக்கை.
மேலும் படிக்க | சரஸ்வதி பூஜையன்று இந்த மந்திரங்களை சொன்னால் போதும்: முட்டாளும் மேதையாகலாம்
சக்கரத்தாழ்வார் வழிபாடு
கடன் தொல்லையை போக்க சக்கரத்தாழ்வார் வழிபாடு உங்களுக்கு கை கொடுக்கும். எங்கெல்லாம் சக்கரத்தாழ்வார் சன்னதி இருக்கிறோ அங்கு சென்று அவருக்கு பிடித்த துளசி மாலை அணிவித்து மன முருகி வேண்டுங்கள். தொடர்ச்சியாக 12 வாரங்கள் சக்கரத்தாழ்வாரை வழிபட்டால் கடன் பிரச்சனைக்கு கூடிய விரைவில் விடிவு காலம் கிடைக்கும்.
இஷ்ட தெய்வ வழிபாடு
கடன் தொல்லையில் இருந்து விடுபட வேண்டும் என்றால் உங்களின் இஷ்ட தெய்வ வழிபாடு அவசியம். உங்களுக்கு பிடித்த தெய்வத்தை தொடர்ச்சியாக வாரம் ஒருமுறை உங்களுக்கு பிடித்தமாதிரி தீபம் ஏற்றி பூ அலங்காரம் செய்து பூஜைகள் செய்து வழிபாடு நடத்துங்கள். கடன் தொல்லையில் இருக்கும்போது எதிர்மறை எண்ணங்கள் அதிகம் உங்களை சூழ்ந்திருக்கும். அதில் இருந்து விடுபட்டு நல் வழியில் செல்லவும், நல்ல வழியில் வருவாயை ஈட்டவும் இந்த வழிபாடு உங்களுக்கு உதவும்.
பைரவர் வழிபாடு
கால பைரவர் ஒவ்வொருவரின் காலச்சக்கரத்தையும் தீர்மானிப்பவராக இருக்கிறார் என்பது ஐதீகம். அதனால் அவரை வாரம் தோறும் வழிபட்டால் உங்களின் கடினமான காலம் எல்லாம் சீக்கிரம் கடந்து நல்ல காலத்தை சந்திப்பீர்கள். நெய் விளக்கு அல்லது அகல் விளக்கில் தீபம் ஏற்றி உங்களின் சங்கடங்களையெல்லாம் தீர்த்து வைக்குமாறும், இந்த கடன் தொல்லையை போக்கிவிடுமாறும் மனமுருகி வேண்டுங்கள். நிச்சயம் உங்களுக்கு நல்ல வழி பிறக்கும்.
மேலும் படிக்க | திருப்பதி போறவங்களுக்கு குட்நியூஸ் சொன்ன தெற்கு ரயில்வே
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ