எந்த இலையில் தீபம் போட்டால் முருகனின் செல்லப்பிள்ளை ஆகமுடியும்? நிலத் தகராறை தீர்க்கும் தீப வழிபாடு!

Beetal Leaves Deepam : செவ்வாயன்று, முருகப் பெருமானை வழிபட்டால் வாழ்வில் வசந்தம் வீசும் என்று சொல்வார்கள். அதிலும் வார வாரம் செவ்வாய்க்கிழமைகளிலும், மாத கிருத்திகைகளிலும், சஷ்டி திதியிலும் முருகனை வழிபடுவது விசேஷம்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 24, 2024, 10:10 PM IST
  • வெற்றிலை தீபம் போடுவதால் என்ன நன்மை?
  • ஆறுமுகனுக்கு ஆறு வெற்றிலைகளில் தீபம்
  • பூமி தொடர்பான பிரச்சனைகள் நீங்க விளக்கேற்றலாம்
எந்த இலையில் தீபம் போட்டால் முருகனின் செல்லப்பிள்ளை ஆகமுடியும்? நிலத் தகராறை தீர்க்கும் தீப வழிபாடு! title=

முருகப்பெருமானுக்கு உகந்த நாளான செவ்வாயன்று, முருகப் பெருமானை வழிபட்டால் வாழ்வில் வசந்தம் வீசும் என்று சொல்வார்கள். அதிலும் வார வாரம் செவ்வாய்க்கிழமைகளிலும், மாத கிருத்திகைகளிலும், சஷ்டி திதியிலும் முருகனை வழிபடுவது விசேஷம். அறுமுகனை வணங்கினால் ஏற்படும் நன்மைகள் நீண்டு கொண்டே செல்லும். 

அதிலும், செவ்வாய்க்கிழமையில் தீபமேற்றி முருகப்பெருமானை வழிபட்டு வருவது எண்ணிப் பார்க்காத அளவு நன்மைகளைத் தரும். செவ்வாய்க்கிழமைகளில் முருகனுக்கு வெற்றிலை தீபம் ஏற்றி வழிபட்டால் நன்மைகள் ஆயிரம் கிடைக்கும். 

காரிய சித்தி
நினைத்த காரியங்கள் கை கூடி வர வேண்டும் என்றால், செவ்வாய்க்கிழமையில் வெற்றிலை தீபம் ஏற்றலாம். அதேபோல, நிலப் பிரச்சனைகள் தீர்ந்து நன்மைகள் நடக்கவும் இந்த உபாயத்தைக் கையாளலாம்.செவ்வாய்க்கு பூமிகாரகன், மங்கள காரகன் என்ற பெயர்கள் உண்டு. எனவே செவ்வாய்க்கிழமை அன்று வெற்றிலை தீபம் ஏற்றி முருகப் பெருமானை வேண்டிக் கொண்டால் பூமி தொடர்பான விஷயங்கள் சுபமாக நடைபெறும்.

மங்களக்காரகர்

நிலம் வாங்குவது, விற்பதில் எந்த பிரச்சனையாக இருந்தாலும் அது தீர்ந்து விடும். அதேப்போல் புது வீடு வாங்குவது, இருக்கும் இடத்தை விற்றுவிட்டு புதிதாக வாங்குவது, இருக்கும் இடத்தில் புது வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணங்களை நிறைவேற்றி வைக்கும் மகத்துவம் வெற்றிலை தீபத்திற்கு உண்டு. 

முருகனை வழிபடும் முறை
முருகக் கடவுளின் புகைப்படம் அல்லது விக்ரகத்தை சுத்தப்படுத்தி மலர்களால் அலங்கரித்து அருகில் விளக்கேற்றவும். வழக்கமாக விளக்கேற்றுவதைப் போல ஏற்றி வைக்கவும். இந்த பூஜையை கிழக்கு திசை மற்றும் வடக்கு திசையில் செய்யலாம் என்பதால், அதற்கு ஏற்றாற் போல முருகனின் படத்தை வைக்கவும்.

மேலும் படிக்க | அக்டோபரில் செவ்வாய்ப் பெயர்ச்சி! முருகனை கும்பிட்டால் இரட்டிப்பு பலன்களைப் பெறும் ராசிகள்!

வெற்றிலை தீப வழிபாடு
காம்புடன் கூடிய வெற்றிலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். வெற்றிலைகள் அழுக்காகவோ, கிழிந்ததாகவோ இருக்கக்கூடாது. வெற்றிலையில் உள்ள காம்புகளை கிள்ளி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வெற்றிலையின் நுனியில் மஞ்சள் குங்குமம் பொட்டு வைக்க வேண்டும். ஒரு தாம்பூலத்தட்டில் ஆறு வெற்றிலைகளையும் வட்ட வடிவில் வைக்கவும். அதன் நடுவில் மஞ்சள் குங்குமம் வைத்த அகல் விளக்கினை வைக்க வேண்டும். 

ஆறு வெற்றிலையின் காம்புகளையும் அகல் விளக்கினுள் போட்டு, அதனுள் நல்லெண்ணெய் ஊற்றி, திரி போட்டு தீபமேற்ற வேண்டும். இப்படி வெற்றிலை தீபம் ஏற்றி இறைவனை வழிபடவும். உங்கள் கோரிக்கைகளை முருகனிடத்தில் சொல்லி நிறைவேற்றித் தருமாறு சரணாகதி அடையவும்.

நறுமணம்
அகல் விளக்கின் உள்ளே வெற்றிலை காம்புகளை போட்டு தீபம் ஏற்றுவதால் ஏற்படும் நறுமணமும், வெற்றிலையின் மீது வைக்கப்பட்டுள்ள அகல்விளக்கின் சூட்டினால் வெற்றிலையில் இருந்து உருவாகிவரும் நறுமணமும் வீடு முழுவதும் நிறைந்திருக்கும். இந்த நறுமணத்தின் மகிமை வீட்டில் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை ஏற்படுத்தும்.

வெற்றிலை தீபம் ஏற்றி வணங்கியதால் முருகப் பெருமான் மனம் மகிழ்ந்து உங்களது வேண்டுதலை நிறைவேற்றி வைப்பார். வெற்றிலை தீப வழிபாட்டினை இதேபோன்று ஒன்பது வாரங்கள் தொடர்ந்து செய்து வந்தால் நினைத்த காரியம் நிச்சயம் நிறைவேறும்.

செவ்வாய்க் கிழமையில் வெற்றிலை தீபம் போட வேண்டிய நேரம்
செவ்வாய்க்கிழமையில் காலை ஆறிலிருந்து ஏழு செவ்வாய் ஹேரையில் வெற்றிலை விளக்கேற்றலாம். அதேபோல, பகல் ஒரு மணி முதல் இரண்டு மணி வரை செவ்வாய் ஹேரையிலும் அல்லது இரவு எட்டு மணி முதல் ஒன்பது மணி வரை செவ்வாய் ஹேரையிலும் வெற்றிலை விளக்கேற்றலாம்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | செவ்வாயின் நட்சத்திரப் பெயர்ச்சியால் பொற்காலம்! பணவரவு! நல்லகாலம் பொறக்குது!!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News