ஆஸ்திரேலிய நாட்டில் தற்போது கோடை காலம் துவங்கி, அந்நாட்டு மாக்களை கடும் வெயில் வாட்டி வதைத்து வருகின்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடும் வெயிலில் வாடி வதையும் மக்களை குளுர்விக்க அந்நாட்டில் இலவசமாக மதுபானம்(பீர்) வழங்கப்படுகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது. அடிலெய்டு மாகாணத்திற்கு உட்பட்ட கெலன் பீச்சில் உள்ள பப் ஒன்றில் வெயில் தவிக்கும் மக்களுக்கு இலவச பீர் வழங்கப்பட்டுள்ளது.


குறிப்பிட்ட அளவிலான பீர் பாட்டில்களை மக்களுக்கு இலவசமாக வழங்க இந்த பார் முடிவு செய்து அறிவித்ததாகவும், அறிவிக்கப்பட்ட இரண்டு மணி நேரத்தில் அனைத்து பீர் பாட்டில்களும் விற்று தீர்ந்ததாகவும், அந்த பாரின் மேலாளர் ஸ்டீபென் பெர்த் தெரிவித்துள்ளளார்.


வரலாற்றில் இல்லா அளவிற்கு தற்போது ஆஸ்திரேலியாவில் வெயில் நிலவி வருகின்றது. குறிப்பாக தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டு நகரிலும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும், கடுமையான வெயில் வாட்டி வருகின்றது.


அடிலெய்டு வடக்கு பகுதியில், சுமார் 49.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும்,  தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள 13 நகரங்களில் இதற்கு நிகரான வெப்பநிலையும் நிலவுகிறது. இந்நிலையில் வெப்பத்தின் கடுமையில் இருந்து தப்பிக்க, மக்களுக்கு குளிர்ச்சியான பீர் இலவசமாக வழங்கப்படுகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மர நிழலில் தஞ்சமடைந்துள்ள மக்களுக்கும், கடும் வியர்வையில் இருந்து தப்பிக்க குளிர்சாதன வசதிகளையும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.


ஆஸ்திரேலியா நாட்டில் வெப்பக்காற்றின் தாக்குதல் கடுமையாக இருப்பதால், அந்நாட்டு மக்கள் பலவிதமான வெப்ப நோய்களுக்கு ஆளாகியுள்ளனர். அதன்படி இதுவரை 44 பேர் நோய்வாய் பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரலாறு காணாத இந்த வெப்பநிலைக்கு காரணாம் பருவ நிலை மாற்றமாக இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.