World Arthritis Day 2024: மூட்டுப் பகுதியில் காணப்படும் விறைப்பு மற்றும் வீக்கம், மூட்டு வலி (Arthritis) என்றழைக்கப்படுகிறது. இந்த உடல்நல பாதிப்பால் உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் உள்ளவர்கள் அதிக வலியால் பாதிக்கப்படுவார்கள். மேலும் இயல்பாக செய்ய வேண்டிய செயல்பாடுகள் கூட அவர்களால் செய்ய இயலாத நிலை ஏற்படும். இந்த பாதிப்பு பெரும்பாலும் 50 வயதை தாண்டியவர்களைதான் பாதிக்கும் எனலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கைகள், கை மணிக்கட்டுகள், இடுப்பு, முதுகு, முழங்கால்கள், தோள்பட்டைகள், முழங்கால்கள் என மூட்டுப்பகுதிகள் முழுவதும் வலி ஏற்படும். வீக்கம், தோலின் நிறமாற்றம், மூட்டு வலியால் குறைவான இயக்கம் உள்ளிட்டவை மூட்டுவலிக்கு பொதுவான அறிகுறிகளாக கூறப்படுகிறது. குறிப்பாக, மூட்டுவலி என்பது பல்வேறு வகையில் உள்ளது.  கீல்வாதம் மற்றும் முடக்கு வாதம் ஆகியவை மிகவும் பொதுவாக காணப்படும் ஒன்றாகும். 


மருத்துவர்கள் கூறுவது என்ன?


வயதானவர்களை பாதிக்கும் அதே வேளையில், இது எந்த வயதுடையோரையும் தாக்கலாம் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதாவது, வயதானவர்களுக்கே தானே வரும் என அசட்டையாக இருக்கக்கூடாது என்று அறிவுரை வழங்குகின்றனர். இதனால், பாதிக்கப்பட்டால் அன்றாட வேலைகளையே செய்ய இயலாத வகையில் கடும் தாக்கத்தை சந்திக்க நேரிடும் என்கின்றனர் மருத்துவர்கள். 


குறிப்பாக இதுபோன்ற மூட்டு வலிகள் ஏற்படுவதற்கு முதுமையும், மரபியல் ரீதியான காரணிகளே இருக்கும். ஆனால், சிலருக்கு இது மோசமான வாழ்க்கை முறை மூலமும் வரும் என்கின்றனர் மருத்துவர்கள். அதாவது, நீங்கள் இந்த 5 மோசமான பழக்கவழக்கங்களை பின்பற்றுகிறீர்கள் என்றால் மூட்டுவலி ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர் மருத்துவர்கள். அவை குறித்து இங்கு காணலாம்.


மேலும் படிக்க | சின்ன வெங்காயத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?


உணவுமுறை குறைபாடு


சமமான ஊட்டச்சத்தை எடுத்துக்கொள்ளவில்லை என்றால் மூட்டுவலி ஏற்படும் வாய்ப்பு அதிகம். மேலும், பதப்படுத்தப்பட்ட உணவுகள், இனிப்புகள், ஆரோக்கியமற்ற கொழுப்புகளை அதிகம் உட்கொண்டால் அது உடலில் தேவையற்ற வீக்கத்தை உண்டாக்கும். இதுபோன்ற மூட்டு வலி மற்றும் வீக்கம் ஆகியவற்றை தவிர்க்க காய்கறிகள், முழு தானியங்கள், நட்ஸ் ஆகியவற்றை நிச்சயம் உட்கொள்ள வேண்டும். அதேபோன்று வீக்கத்தை குறைக்கும் மஞ்சள், பூண்டு, கீரைகள் ஆகியவற்றையும் உட்கொண்டு எப்போதும் உடலை நீர்ச்சத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும். 


உட்காருவதில் கவனம்


நீங்கள் உட்காரும் போதும், நிற்கும்போதும், தூங்கும்போதும் தவறான நிலையில் இருந்தீர்கள் என்றால் மூட்டுப்பகுதியில் அதிக அழுத்தம் ஏற்படும். இதுபோன்ற சீரற்ற முறை மூட்டுகளை சேதப்படுத்தி, வீக்கத்தை உண்டாக்கும். 


குறைவான உடல் செயல்பாடு


அதாவது, உடல் ரீதியான செயல்பாடு குறைவாக இருந்தாலும் மூட்டு வலி ஏற்படும் அபாயம் அதிகம். தினந்தோறும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வது மூட்டுக்கும் நல்லது, மூட்டுக்களை சுற்றிய தசைகளுக்கும் நல்லது. இது அதில் அதிக அழுத்தம் ஏற்படாமல் தடுக்கும். இவை மட்டுமின்றி அதிக உடல் எடையுடன் இருப்பதும் கூட மூட்டு வலியை ஏற்படுத்தலாம். ஆரம்பத்திலேயே வலி ஏற்படும்பட்சத்தில் தகுந்த மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும். இதற்கு நிவாரணம் அளிக்க பல்வேறு சிகிச்சை உள்ளன. 


(பொறுப்பு துறப்பு: இவற்றை பின்பற்றும் முன்னர் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை)


மேலும் படிக்க | நினைத்த விஷயங்கள் நடக்க வேண்டுமா? 5 விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ