அசிங்கமான தொப்பை கொழுப்பை அசால்டாய் குறைக்க ஆயுர்வேத குறிப்புகள்
Weight Loss Tips In Tamil : உடல் எடை குறைப்பது என்பது கடினமானது. பல முயற்சிகள் மேற்கொண்ட பிறகு தான் இதற்கான பலனை நாம் பெறுகிறோம். அதன்படி சில ஆயுர்வேத குறிப்புகளை உடல் எடையை குறைக்க உதவும், அவை என்னவென்று பார்ப்போம்.
உடல் எடை குறைப்பது என்பது கடினமானது. பல முயற்சிகள் மேற்கொண்ட பிறகு தான் இதற்கான பலனை நாம் பெறுகிறோம். அதேபோல் தொடர்ந்து பல மணிநேரம் சாப்பிடாமல் பசியுடன் இருந்தால் உடல் எடை குறையாது மாறாக பலவீனமாக உணர்வீர்கள் மேலும் வயிற்றில் கேஸ் ஏற்படவு, வாய்ப்புள்ளது. இந்நிலையில் உடல் எடை குறைக்கும் (weight loss in Ayurveda) பயணமானது ஆரோக்கியமாகவும், சீராகவும், மேலும் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும். இதற்கு நாம் ஒரு சில விஷயங்களில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியமாகும்.
உடல் எடை குறைப்பது குறித்து ஆயுர்வேதம் கூறுவது என்ன (Ayurveda on weight loss) :
உடலில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் ஒரேடியாக குறைத்துவிட கூடாது. இதற்காக, துல்லியமான முறையை நாம் பின்பற்றுவது மிகவும் அவசியமாகும். அதேபோல் நாம் மேல் கொள்ளும் முறை எப்போதும் ஆரோக்கியமாகவும், சீராகவும், பயனுள்ள குறிப்புக்கலாக இருக்க வேண்டும். அதிலும் ஆயுர்வேத முறை மிகவும் நம்பகத்தக்கவை. ஆயுர்வேதம் மூலம் உடல் எடை குறைத்தால் ஆரோக்கியமானகவும், நீண்ட ஆயுளுடனும் இருக்க முடியும். இந்நிலையில் சில ஆயுர்வேத குறிப்புகள் மூலம் உடல் எடையை எப்படி குறைப்பது என்று பார்ப்போம்.
சரியான நேரத்தில் உணவை எடுத்துக்கொள்ளுங்கள்:
ஆயுர்வேதத்தின் படி, உடல் எடை குறைக்கும் முறையில் முதலில் ஆரோக்கியமான மற்றும் சரியான நேரத்தில் உணவை சாப்பிடுவது மிகவும் முக்கியமாகும். எனவே நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவு ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அதேபோல் சரியாக ஜீரணிக்க, சரியான நேரத்தில் உணவை சாப்பிட வேண்டும்.
மேலும் படிக்க | குண்டாக இருந்தாலும் பிடித்த உடையில் ஒல்லியா தெரியனுமா? ‘இதை’ பண்ணுங்க!
ஆரோக்கியமற்ற சிற்றுண்டிகளை தவிர்க்கவும்:
உடல் எடை சரியான முறையில் குறைக்க வேண்டுமானால் ஆரோக்கியமற்ற சிற்றுண்டிகளை தவிர்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக பொறித்த சிப்ஸ், எண்ணெய் தின்பண்டங்கள் போன்றவற்றை தவிர்த்து பழங்களை சாப்பிடவும். இவை நல்ல செரிமானத்திற்கு உதவும்.
பருவத்திற்கு ஏற்ப உணவை தேர்ந்தெடுங்கள்:
உடல் எடையை குறைக்க சிறந்த வழி, பருவத்திற்கு ஏற்ப உணவை தேர்வு செய்வது. அந்த வகையில் கோடையில் அதிக கார்போஹைட்ரேட் உணவுகள் நன்மை தரும். குளிர் காலத்தில் வேர் காய்கறிகள், நட்ஸ், உலர் பழங்கள் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.
இரவு உணவுக்குப் பின் நடைபயிற்சி:
நீங்கள் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க நினைத்தால் இரவு சாப்பிட்ட பிறகு கட்டாயம் நடைபயிற்சியை மேற்கொள்ளவும்.
எலுமிச்சை தண்ணீர்:
உடல் எடை குறைக்கும் பயணத்தில் எலுமிச்சை மிகவும் உதவியாக இருக்கும். ஏனெனில் எலுமிச்சை இயற்கையாகவே நச்சு நீக்கி ஆகும். அந்த வகையில் இந்த பணத்தை தொடர்ந்து குடிந்தது வந்தால் உடல் எடையை எளிதாக குறைக்கலாம்.
சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிக்கவும்:
இரவு உணவிற்கு முன் ஒரு பாட்டில் தண்ணீர் குடிப்பது கலோரி உட்கொள்ளலைக் கட்டுப்படுத்த மிகவும் உதவியாக இருக்கும். தண்ணீரில் பூஜ்ஜிய கலோரிகள் உள்ளன. ஆனால் சாப்பிடுவதற்கு முன் இதை குடிப்பதால், நீங்கள் குறைவாக சாப்பிடுவீர்கள்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உடல் எடை மளமளவென குறைய தினம் காலையில் நெய்யை இப்படி சாப்பிடுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ