#OMG - இந்திய கலாச்சாரத்தை பாதுகாக்கும் பதாஞ்சலி Jeans!
`பதாஞ்சலி பரிதான்` என்னும் பெயரில் Jeans, T-Shists ஆடைகள் கொண்ட அங்காடி....
சுதேசி பிரியர் பாபா ராம்தேவின் பதாஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் சமீபத்தில் 'பதாஞ்சலி பரிதான்' என்னும் பெயரில் Jeans, T-Shists ஆடைகள் கொண்ட அங்காடியினை அறிமுகம் செய்தது., இதற்கு சுதேசி பிரியர்களிடம் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
ஹரித்வாரை மையாமாக கொண்டு இயங்கும் பதாஞ்சலி நிறுவனம் தொடர்ந்து இயற்கை தயாரிப்பு பொருட்களை அறிமுகம் செய்து வருகிறது. அனைத்து துறைகளிலும் கால் பதித்து வரும் பதாஞ்சலி நிறுவனம் சமீபத்தில் பசும்பால், தயிர், மோர் மற்றும் பன்னீர் ஆகியவைகளும், உறைந்த காய்கறி பிரிவில் பட்டாணி, கலைவை காய், இனிப்பு சோளம் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றையும் அறிமுகம் செய்தது. அதேப்போல் கால்நடை உணவு மற்றும் உணவைச் சப்ளிமெண்ட்ஸ், சோலார் பேனல்கள் ஆகியவற்றினையும் அறிமுகம் செய்தது.
உணவு, அழுகு சாதன பொருட்கள் மட்டும் அல்லாமல் டெலிகாம் நிறுவனத்தில் கால் பதிக்கும் வகையிலும் பதாஞ்சலி சிம்மினை செயற்பாட்டிற்கு கொண்டு வந்தது (தற்போது பதாஞ்சலி நிறுவன ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது).
இந்நிலையில் சமீபத்தில் 'பதாஞ்சலி பரிதான்' என்னும் பெயரில் Jeans, T-Shists ஆடைகள் கொண்ட அங்காடியினை அறிமுகம் செய்தது. அறிமுகத்தின் தருவாயில் கூட ஆத்திரத்தில் மூழ்காத வாடிக்கையாளர்கள், பாபா ராம்தேவின் சமீபத்திய ட்விட்டர் பதிவின் மூலம் மிகுந்த கோபத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த நவம்பர் 5-ஆம் நாள் பாபா ராம்தேவ் தனது ட்விட்டர் பக்கதில் "ரூ.7000 மதிப்புள்ள 3 பதாஞ்சலி பொருட்கள் (1 ஜீன்ஸ், 2 டீசர்ட்) தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு ரூ.1100-க்கு விற்கப்படும்) என பதிவிட்டு இருந்தார். இந்த பதிவிற்கு இணைய பிரியர்கள் விமர்சனங்கள் மூலம் தங்களது கோபத்தினை வெளிப்படுத்தியுள்ளனர்.
அதில் சிலர்... ஒரு காலத்தில் jeans பேன்டுகளை எதிர்த்த பாபா தற்போது விளம்பரம் செய்து வருகின்றார். jeans பேன்ட் எப்போது சுதேசி பட்டியலில் சேர்க்கப்பட்டது என கேள்வி எழுப்பியுள்ளனர்.