ஆண்கள் என்றாலே தாடி மீசையுடன் இருப்பது தனி அழகு தான். பெண்களுக்கு கூந்தல் அழகு என கூறப்படுவதுபோல் ஆண்களுக்கு தாடி மீசை. இது அழகு மட்டுமல்ல, ஆண்களின் அணுகுமுறையும், ஆளுமையை வெளிப்படுத்தும் அடையாளமாகவும் கருதப்படுகிறது. இதில் சுவாரஸ்யம் என்ன என்றால், தாடி மீசையை ஷேவ் செய்யக்கூடாது என்பதற்காகவே ஒரு தீம் கடைபிடிக்கப்படுகிறது. நோ ஷேவ் நவம்பர் என்ற தீம் இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்?. நோ ஷேவ் நவம்பருக்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யத்தை இங்கே தெரிந்து கொள்வோம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நோ-ஷேவ் நவம்பர் 


ஒரு மாதம் கடைபிடிக்கப்படும் நோ ஷேவ் நவம்பர் என்பது விழிப்புணர்வுக்காக கடைபிடிக்கபடும் ஒரு தீம்மாகும். இந்த மாதத்தில் ஆண்கள் ஷேவிங் மற்றும் டிரிம் செய்வதை தவிர்ப்பார்கள். இது எதற்காக என்றால், ஆண்களை தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோய் குறித்தும், கீமோ தெரபி மூலம் புற்றுநோய் சிகிச்சையின்போது அவர்கள் இழக்கும் முடியை, சுதந்திரமாக பெறும் வகையில் அதனை வளர அனுமதிப்பதன் அடையாளமாக கடைபிடிக்கப்படுகிறது. 


இது ஒரு இணைய அடிப்படையிலான அமைப்பு ஆகும். லாப நோக்கமற்ற முறையில் செயல்படும் இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் மக்களிடையே புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். இந்த விழிப்புணர்வு மூலம் திரட்டபடும் நிதி புற்றுநோய் தடுப்பு ஆராய்ச்சி மற்றும் கல்விக்காக செலவிட பயன்படுத்தப்படுகிறது. 


மேலும் படிக்க | Ration Card: ரேஷன் கடைகளை கண்காணிக்க புதிய செயலி தொடக்கம்


நோ ஷேவ் நவம்பர் ஆரம்பம்


1996 ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த மேத்யூ என்பவர் 2007 ஆம் ஆண்டு காலாமானர். அவரின் மகனான ரெபெக்காஹில் தனது சகோதர சகோதரிகளுடன் இணைந்து புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கினர். அவர்களின் தொடர் பிரச்சாரத்தின் விளைவாக உருவானது தான் நோ ஷேவ் நவம்பர். பேஸ்புக்கில் உருவான பக்கம் நாளுக்கு நாள் வளர்ந்து உலகளாவிய புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரமாக மாறியது. நீங்களும் கூட இந்த பிரச்சாரத்தில் பங்கேற்கலாம். தாடி மீசையை டிரிம் செய்யாமல் அவர்கள் கொடுக்கும் வழிமுறைகளை பின்பற்றி, புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு செய்யலாம். 


மேலும் படிக்க | 7th Pay Commission: அகவிலைப்படி அரியர் தொகை எப்போது கிடைக்கும்? முக்கிய அப்டேட்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ