Bajaj Pulsar இன் Dagger Edge எடிஷன் அறிமுகம், என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?
Bajaj Pulsar இன் Dagger Edge எடிஷன் Pulsar 150 இன் விலை ரூ .1,01,818, Pulsar 150 Twin Disc இன் விலை 1,04,819, Pulsar 180 இன் விலை 1,09,651 மற்றும் Pulsar 220F விலை 1,28,250 ஆகும்.
புது டெல்லி: பஜாஜ் ஆட்டோ தனது மிகவும் பிரபலமான பைக் பல்சரின் Dagger Edge பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பதிப்பில், நிறுவனம் Pulsar 150, Pulsar 180 மற்றும் Pulsar 220F ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் கிராபிக்ஸ் தவிர வேறு எதுவும் மாற்றப்படவில்லை. இந்த பைக்குகளின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி அறிந்து கொள்வோம் ...
Dagger Edge பதிப்பு விலை - Bajaj Pulsar இன் Dagger Edge எடிஷன் Pulsar 150 இன் விலை ரூ .1,01,818, Pulsar 150 Twin Disc இன் விலை 1,04,819, Pulsar 180 இன் விலை 1,09,651 மற்றும் Pulsar 220F விலை 1,28,250 ஆகும்.
Pulsar 150 Dagger Edge பதிப்பின் அம்சங்கள் - Pulsar 150 Dagger Edge பதிப்பு பியர்ல் ஒயிட் மற்றும் சஃபயர் ப்ளூ ஆகிய இரண்டு மேட் வண்ண விருப்பங்களுடன் கிடைக்கிறது. பியர்ல் ஒயிட் நிறம் மட்கார்ட் மற்றும் விளிம்புகளில் சிவப்பு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இது அதன் உடல் கட்டமைப்பு முழுவதும் சிவப்பு-கருப்பு கிராபிக்ஸைப் பெறுகிறது. இது 149.5cc நான்கு-ஸ்ட்ரோக் எஞ்சினைக் கொண்டுள்ளது, இது அதிகபட்சமாக 8,500 rpm இல் 13.8bhp ஆற்றலையும், 6500 rpm இல் பீக் டார்க்கையும் உருவாக்குகிறது.
ALSO READ | Bajaj பல்சர் என்எஸ்125 vs கேடிஎம் டியூக் 125: விலை, முழு விவரக்குறிப்புகள் இங்கே
Pulsar 180 Dagger Edge பதிப்பின் அம்சங்கள் - Pulsar 180 Dagger Edge மாடலில் சஃபைர் ப்ளூ இல்லை மற்றும் அதன் 150 சிசி மாடலில் கூடுதலாக எரிமலை சிவப்பு (வோல்கானிக் ரெட்) மற்றும் பிரகாசமான கருப்பு மேட் வண்ணங்கள் பயன்படுத்தப்படுகிறது. எரிமலை சிவப்பு நிறம் அதே வெள்ளை-கருப்பு கிராபிக்ஸ் மற்றும் சிறப்பம்சங்களைப் பெறுகிறது. அதேசமயம், பிரகாசமான கருப்பு நிறம் சிவப்பு கிராபிக்ஸ் மற்றும் சிறப்பம்சங்களை மட்டுமே பெறுகிறது. பைக்கை இயக்குவது அதே 178.6 சிசி மோட்டார் ஆகும், இது 8500 rpm இல் 16.8 bhp மற்றும் 6500 rpm இல் 14.52 Nm திருப்புவிசையை உற்பத்தி செய்கிறது.
Pulsar 220F Dagger Edge பதிப்பின் அம்சங்கள் - Pulsar 220F அதே நான்கு வண்ணங்களை, அதே கிராபிக்ஸ் மற்றும் சிறப்பம்சங்களுடன் பெறுகிறது. இது அதே 220 சிசி இன்ஜின் உடன் உள்ளது, இது 8500 rpm இல் மணிக்கு 20.1 bhp மற்றும் 7000 rpm இல் மணிக்கு 18.55 Nm திருப்புவிசையை உற்பத்திச் செய்கிறது.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR