இதை விட மோசமான ஒன்றினை மக்கள் உண்டிருக்க வாய்ப்பில்லை என நான் நம்புகிறேன்...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆடை, அணிகலன் என பெண்களை, பெண் அடையாளங்களை ஒரு கவர்ச்சி பொருளாக பயண்படுத்தி வரும் நாகரீகம் தற்போது உணவு துறையிலும் நுழைந்துவிட்டது. ஆம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், பெண் உடல் உறுப்புகளை போல் உணவு பொருள் வடிவமைத்து விற்பனை செய்யப்பட்டு வரும் கொடுமை அரங்கேறியுள்ளது.


ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ளது குப்பில் பேக்கிரி. சமீப காலமாக இந்த பேக்கிரி உலக புகழ் பெற்று வருகிறது. காரணம் இங்கு விற்பனையாகும் பெண் மார்பக வடிவில் உறுவாக்கப்படும் பன்கள் 'Boob Bread' தான்... உள்ளூர் வாசிகளின் கவனத்தினை ஈர்த்துள்ள இந்த பன் தற்போது உலக மக்களின் கவனத்தினை ஈர்த்துள்ளது.



மேலும் இந்த பன் ஆனது முட்டை மற்றும் பால் இன்றி தயாரிக்கப்படுவதாக இந்த பேக்கரி உரிமையாளர் விளம்பரப்படுத்துகின்றார். இந்த அறிவிப்பு மேலும் இந்த தயாரிப்பின் விற்பனையினை அதிகரித்து வருகின்றது. 


மிருதுவான தன்மையினை தக்கவைக்க இந்த பேக்கிரி ஊழியர்கள் கையாளும் முறையும், பன்னின் சுவையும் தான் இந்த பன்னினை கடந்த 6 ஆண்டுகளாக அப்பகுதி மக்களின் விரும்பத்தக்க பன்னாக வைத்திருக்கின்றது என பேக்கிரியின் உரிமையாளர் தெரிவிக்கின்றார்.


ஜப்பானில் பிரபலமாகியுள்ள இந்த 'Boob Bread' ஒருபக்கம் இருக்க, பாரிஸ் நகரில் மற்றொரு பன் பிரபலமாகி வருகின்றது. அது பெயர் என்ன தெரியுமா 'Penis Baguettes'. பாரிஸின் Legay Choc Boulangerie என்னும் பேக்கிரி இந்த தயாரிப்பினை சமீப காலமாக பிரபலம் செய்து வருகின்றது.



மேலை நாடுகளில் பிரபலமாகும் ஒவ்வொன்றும் இந்தியாவில் பிரபலமாகும் நிலையில் இந்த தயாரிப்புகளும் விரைவில் இந்தியாவிற்கு விஜயம் செய்தால் வியப்பில்லை...