சாப்பாட்டில் ஒரு முடி இருந்ததால் மனைவியின் தலையை மொத்தமாக மொட்டையடித்த கணவன்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வங்கதேச தலைநகர் டாக்கா எல்லைக்குட்டப்பட்ட பகுதியில் ஜோய்பூரட் எனும் பகுதி உள்ளது. இங்கு பப்ளு மொண்டல் என்ற மபருக்கு 23 வயதுடைய மனைவியிருந்தார். இவர் திருமண வாழ்க்கை இனிமையாக இருந்தாலும் அவ்வப்போது இவர்களிடையே சண்டை வருவதும், பின்னர் இருவரும் சேர்ந்துகொள்வதும் வாடிக்கையாக இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு நாள் பப்ளுவிற்கு அவருடைய மனைவி இரவு உணவு கொடுத்துள்ளார்.


இரவு உணவில் ஒரு தலை முடி இருந்துள்ளது. அதை வெளியே எடுத்து போட்டு அவர் கோபத்தில் சாப்பிட்டார். பின்னர் சாப்பாடு முடிந்ததும் அவருக்கு அவரது மனைவி பால் கொடுத்தபோது அதிலும் முடி கிடந்துள்ளது. இதைக் கண்டு ஆத்திரமடைந்த பப்ளு தனது மனைவியின் தலைமுடியைப் பிடித்து மொட்டையடித்துள்ளார்.


இது குறித்து அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்ததன் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி பப்ளு மொண்டலைக் கைது செய்தனர். இந்த சம்பவம் தற்போது வங்கதேச மாநிலத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.