Bank Strike: நாடு முழுவதும் 2 நாட்களுக்கு வங்கிகளின் வேலை நிறுத்தம், முக்கிய விவரங்கள் இதோ
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI), பஞ்சாப் நேஷனல் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் வங்கி மற்றும் யூகோ வங்கி ஆகியவை டிசம்பர் 16 மற்றும் டிசம்பர் 17 ஆகிய தேதிகளில் வங்கி வேலைநிறுத்தம் காரணமாக தங்கள் செயல்பாடுகள் பாதிக்கப்படும் என்று கூறியுள்ளன.
புதுடெல்லி: பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐக்கிய வங்கி சங்கங்கள் (UFBU) டிசம்பர் 16 முதல் 2 நாட்களுக்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI), பஞ்சாப் நேஷனல் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் வங்கி மற்றும் யூகோ வங்கி ஆகியவை டிசம்பர் 16 மற்றும் டிசம்பர் 17 ஆகிய தேதிகளில் வங்கி வேலைநிறுத்தம் காரணமாக தங்கள் செயல்பாடுகள் பாதிக்கப்படும் என்று கூறியுள்ளன.
இருப்பினும், வாடிக்கையாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்றும், ஸ்ட்ரைக் நடக்கக்கூதாது என்றும் வலியுறுத்தியுள்ளன.
இது குறித்து எஸ்பிஐ ட்வீட் செய்துள்ளது:
பஞ்சாப் நேஷனல் வங்கியின் ட்வீட்:
இது குறித்த சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் ட்வீட்:
ALSO READ | YONO SBI App செயலி மூலமாக முன்னரே அங்கீகரிக்கப்பட்ட கடன்
அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் (AIBOC) பொதுச் செயலாளர் சஞ்சய் தாஸ், PTI செய்தி நிறுவனத்திடம், இரண்டு நாள் வேலைநிறுத்தம் தவிர, தனியார்மயமாக்கும் யோசனையை அரசாங்கம் கைவிடவில்லை என்றால், தொடர் போராட்டங்களும் நடைபெறும் என்றார்.
2021ஆம் ஆண்டு பட்ஜெட் உரையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடப்பு நிதியாண்டில் இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என்று கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
அரசாங்கம் ஏற்கனவே ஐடிபிஐ வங்கியை தனியார்மயமாக்கியுள்ளது. 2019 ஆம் ஆண்டில் எல்ஐசிக்கு அந்த வங்கியின் பெரும்பான்மையான பங்குகளை அரசாங்கம் விற்றது. மேலும் கடந்த நான்கு ஆண்டுகளில் 14 பொதுத்துறை வங்கிகளை அரசு ஒன்றிணைத்துள்ளது.
UFBU என்பது ஒன்பது வங்கி சங்கங்களின் ஒரு அமைப்பாகும்.
UFBU இன் உறுப்பினர்களில், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் (AIBEA), அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு (AIBOC), தேசிய வங்கி ஊழியர்களின் கூட்டமைப்பு (NCBE), அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் (AIBOA) மற்றும் இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு (BEFI) ஆகியவை உள்ளன.
இந்த அமைப்பில் உள்ள மற்ற அமைப்புகள் இந்திய தேசிய வங்கி ஊழியர் சம்மேளனம் (INBEF), இந்திய தேசிய வங்கி அதிகாரிகள் காங்கிரஸ் (INBOC), வங்கி ஊழியர்களின் தேசிய அமைப்பு (NOBW) மற்றும் வங்கி அதிகாரிகளின் தேசிய அமைப்பு (NOBO) ஆகியவை ஆகும்.
ALSO READ | SBI News: இந்த கணக்கு உங்ககிட்ட இருக்கா? இதில் கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR