அலெர்ட்! ஜூன் மாதம் 12 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்! முழு விவரம் இதோ!
Bank Holidays In India: இந்திய ரிசர்வ் வங்கியின் அட்டவணையின்படி, வார இறுதி நாட்கள் சேர்த்து ஜூன் மாதத்தில் மொத்தம் 12 நாட்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டு இருக்கிறது.
Bank Holidays In India: இந்திய ரிசர்வ் வங்கியின் அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து விடுமுறை நாட்களிலும் இந்தியாவிலுள்ள அனைத்து வங்கிகளும் மூடப்பட்டிருக்க வேண்டும். மே மாதம் முடிவடையவுள்ள நிலையில் ஜூன் 2023க்கான வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ளது. ஜூன் மாதத்தில் வழக்கமான வார இறுதி நாட்களைத் தவிர ரத யாத்திரை, கர்ச்சி பூஜை மற்றும் ஈத் உல் அஷா போன்ற விழாக்கள் காரணமாக பல மாநிலங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். பொதுவாக ரிசர்வ் வங்கி தான் இந்தியாவில் வங்கி விடுமுறை நாட்களை முடிவு செய்கிறது. ரிசர்வ் வங்கி ஒவ்வொரு ஆண்டும் வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலை வெளியிடுகிறது, இதில் தேசிய விடுமுறைகள், அரசு விடுமுறைகள் மற்றும் மத விடுமுறைகள் ஆகியவை அடங்கும். இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) வழிகாட்டுதல்களின்படி, அந்தந்த மாநிலங்களை பொறுத்து சில பிராந்திய விடுமுறைகளுடன் அனைத்து பொது விடுமுறை நாட்களிலும் வங்கிகள் மூடப்படும். பிராந்திய விடுமுறைகள் அந்தந்த மாநில அரசாங்கங்களால் தீர்மானிக்கப்படுகின்றன. ரிசர்வ் வங்கியின் வங்கி விடுமுறை அட்டவணை ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது, தனிப்பட்ட வங்கிகளின் இணையதளங்களிலும் வங்கி விடுமுறை நாட்களின் அட்டவணையை நீங்கள் பார்த்து கொள்ளலாம். இந்திய ரிசர்வ் வங்கியின் அட்டவணையின்படி, ஜூன் மாதத்தில் மொத்தம் 12 நாட்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டு இருக்கிறது.
மேலும் படிக்க | Employee Pension Scheme: ஓய்வூதியம் தொடர்பான முக்கிய அறிவிப்பு!
ஜூன் 2023 வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல்:
- ஜூன் 4, 2023: ஞாயிற்றுக்கிழமை.
- ஜூன் 10, 2023: இரண்டாவது சனிக்கிழமை.
- ஜூன் 11, 2023: ஞாயிற்றுக்கிழமை.
- ஜூன் 15, 2023: ராஜ சங்கராந்தியை முன்னிட்டு மிசோரம் மற்றும் ஒடிசாவில் வங்கிகள் மூடப்படும்.
- ஜூன் 18, 2023: ஞாயிற்றுக்கிழமை.
- ஜூன் 20, 2023: ரத யாத்திரை ஒடிசாவில் வங்கிகள் மூடப்படுவதற்கு வழிவகுக்கும்.
- ஜூன் 24, 2023: நான்காவது சனிக்கிழமை
- ஜூன் 25, 2023: ஞாயிற்றுக்கிழமை.
- ஜூன் 26, 2023: கர்ச்சி பூஜையால் திரிபுராவில் வங்கிகள் மூடப்படும்.
- ஜூன் 28, 2023: ஈத் உல் அஸ்ஹாவை முன்னிட்டு கேரளா, மகாராஷ்டிரா மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் போன்ற பகுதிகளில் வங்கிகள் மூடப்பட்டு இருக்கும்.
- ஜூன் 29, 2023: ஈத் உல் அஷாவை முன்னிட்டு, பிற மாநிலங்களில் வங்கிகள் மூடப்பட்டு இருக்கும்.
- ஜூன் 30, 2023: ரீமா ஈத் உல் அழாவை முன்னிட்டு மிசோரம் மற்றும் ஒடிசாவில் வங்கிகள் மூடப்பட்டு இருக்கும்.
மேலே குறிப்பிட்ட நாட்களில் இந்தியாவிலுள்ள அனைத்து வங்கிகளும் மூடப்பட்டு இருக்கும். இதில் குறிப்பிட்ட மாநிலங்கள் அல்லது பிராந்தியங்களில் கடைபிடிக்கப்படும் பிற விடுமுறைகள் சற்று வேறுபட்டு இருக்கலாம். சில சமயம் உள்ளூர் நிகழ்ச்சிகளின் காரணமாக வங்கிகள் மூடப்பட்டு இருக்கலாம். வங்கிகளுக்கு விடுமுறை அழைக்கப்பட்டாலும் ஏடிஎம்கள், பண டெபாசிட்கள், ஆன்லைன் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கும். உள்ளூர் திருவிழாக்களைக் கருத்தில் கொண்டு விடுமுறைகள் தீர்மானிக்கப்படுவதால், இந்த விடுமுறைகள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ