விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவை இன்று முதல் பேங்க் ஆப் பரோவுடன் இணைக்கப்படுகின்றன!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கூடுதல் செலவினத்தை எதிர்கொள்வதற்காக பேங்க் ஆப் பரோடா வங்கிக்கு 5042 கோடி ரூபாயை மூலதனமாக வழங்க கடந்த வாரம் மத்திய அரசு முடிவு செய்தது. இந்த நிலையில் ஏப்ரல் ஒன்றாம் தேதியான நாளை முதல் விஜயா வங்கி, தேனா வங்கிகள், பேங்க் ஆப் பரோடாவின் கிளைகளாக செயல்படும் என்றும், அந்த இரு வங்கிகளின் வாடிக்கையாளர்களும் இனி, பேப் ஆப் பரோடா வங்கி வாடிக்கையாளர்களாக கருதப்படுவார்கள் என கடந்த ஆண்டு செப்டம்பர் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 


விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவை இன்று முதல் பேங்க் ஆப் பரோவுடன் இணைக்கப்படுகின்றன. வங்கிகள் இணைவு முழுமையடைய உள்ளதால் விஜயா வங்கி முதலீட்டாளர்களுக்கு 1,000 பங்குகளுக்கு 402 பாங்க் ஆஃப் பரோடா பங்குகளும், தேனா வங்கி முதலீட்டாளர்களின் 1000 பங்குகளுக்கு 110 பாங்க் ஆஃப் பரோடா பங்குகளும் அளிக்கப்படும்.


மேலும் இன்று முதல் விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியன பேங்க் பரோடாவின் கிளைகளாக செயல்படும் என்றும், இனி இரு வங்கிகளின் வாடிக்கையாளர்களும் பேங்க் ஆப் பரோடாவின் வாடிக்கையாளர்களாக கருதப்படுவார்கள் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 18 ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. மறுபக்கம் இந்திய வங்கிகள் ஊழியர்கள் சங்கங்கள் இந்த வங்கிகள் இணைவால் பலர் வேலை இழக்க நேரிடும் என்று எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.