புதுடெல்லி: ஏப்ரல் 2022 வங்கி விடுமுறை: மார்ச் மாதம் முடிய இன்னும் 9 நாட்கள் மட்டுமே உள்ளன. அதன்பிறகு ஏப்ரல் வந்து புதிய நிதியாண்டு தொடங்கும். இதனுடன் ஏப்ரலில் பல வங்கிகளுக்கு விடுமுறை என்று சொல்லலாம். குடி பத்வா, அம்பேத்கர் ஜெயந்தி, பைசாகி போன்ற பண்டிகைகள் காரணமாக ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 15 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஏப்ரல் 2022க்கான வங்கி விடுமுறைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்தப் பட்டியலின்படி, அடுத்த மாதம் ஏப்ரல் மாதத்தில், வார விடுமுறை உட்பட மொத்தம் 15 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும்.


மேலும் படிக்க | பணவரவு, மகிழ்ச்சி பொங்க வீட்டில் எந்த சிலைகளை வைக்க வேண்டும்?


ரிசர்வ் வங்கி பட்டியலை வெளியிட்டுள்ளது
ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விடுமுறைப் பட்டியலின்படி, வங்கி விடுமுறைகள் நாடு முழுவதும் ஒரே கட்டமாக இருக்காது. இதில் பல விடுமுறைகள் வெவ்வேறு மாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் அல்லது அந்த மாநிலங்களில் சிறப்பு நிகழ்வுகளின் அறிவிப்பைப் பொறுத்தது. இந்த விடுமுறைகள் அனைத்து மாநிலங்களிலும் பொருந்தாது, ஏப்ரல் மாதத்தில் எத்தனை விடுமுறைகள் உள்ளன, அவை எங்கு பொருந்தும் என்பதை பார்ப்போம்.


விடுமுறை நாட்களின் பட்டியலைப் பார்க்கவும் (வங்கி விடுமுறை பட்டியல் ஏப்ரல் 2022)
ஏப்ரல் 1 - வங்கிக் கணக்குகளின் வருடாந்திர மூடல் - (அனைத்து மாநிலங்களிலும் விடுமுறை)
ஏப்ரல் 2 – குடி பத்வா/உகாதி விழா/நவராத்திரியின் முதல் நாள்/தெலுங்கு புத்தாண்டு/சஜிபு நோங்கம்பாம்பா (சைரோபா) – பேலாபூர், பெங்களூர், சென்னை, ஹைதராபாத், இம்பால், ஜம்மு, மும்பை, நாக்பூர், பனாஜி மற்றும் ஸ்ரீநகர் ஆகிய இடங்களின் வங்கிகளுக்கு விடுமுறை.
ஏப்ரல் 3 - ஞாயிற்றுகிழமை (வார விடுமுறை)
ஏப்ரல் 4 - சாரிஹுல்-ராஞ்சி வங்கிகளுக்கு விடுமுறை.
ஏப்ரல் 5 - பாபு ஜக்ஜீவன் ராம் பிறந்தநாள் - ஹைதராபாத் வங்கிகளுக்கு விடுமுறை.
9 ஏப்ரல் - சனிக்கிழமை (மாதத்தின் 2வது சனிக்கிழமை)
ஏப்ரல் 10 - ஞாயிற்றுகிழமை (வார விடுமுறை)
ஏப்ரல் 14 - டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தி/ மகாவீர் ஜெயந்தி/ பைசாகி/ தமிழ் புத்தாண்டு/ சைரோபா, பிஜூ விழா/ போஹர் பிஹு - ஷில்லாங் மற்றும் சிம்லாவைத் தவிர மற்ற இடங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.
15 ஏப்ரல் - புனித வெள்ளி / பெங்காலி புத்தாண்டு / ஹிமாச்சல் நாள் / விஷு / போஹாக் பிஹு - ஜெய்ப்பூர், ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் தவிர மற்ற இடங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.
ஏப்ரல் 16 - போஹாக் பிஹு - கவுகாத்தி வங்கிகளுக்கு விடுமுறை.
ஏப்ரல் 17 - ஞாயிற்றுகிழமை (வார விடுமுறை) 
ஏப்ரல் 21 - கடியா பூஜை - அகர்தலாவில் வங்கிகள் மூடப்பட்டுள்ளன
ஏப்ரல் 23 - சனிக்கிழமை (மாதத்தின் நான்காவது சனிக்கிழமை)
ஏப்ரல் 24 - ஞாயிற்றுகிழமை (வார விடுமுறை)
ஏப்ரல் 29 - ஷப்-இ-கத்ர்/ஜுமாத்-உல்-விடா - ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் வங்கிகளுக்கு விடுமுறை.


மேலும் படிக்க | ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர் பெயரை சேர்ப்பது எப்படி?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR