Basant Panchami 2022: வசந்த பஞ்சமி, இந்தியாவில் வசந்த காலத்தின் வருகையை குறிக்கிறது. இது ஒவ்வொரு ஆண்டும் வசந்த காலத்தின் துவக்கத்தை குறிக்கும் வகையில் தை மாதத்தில் அமாவாசைக்குப் பிறகு வரும் பஞ்சமியில் கொண்டாடப்படுகின்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த விழா இந்து மதத்தில் அறிவாற்றல், இசை மற்றும் கலைகளுக்கு அதிபதியாக விளங்கும் சரஸ்வதி அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கற்றலுக்கும் அறிவிற்கும் தெய்வமான சரஸ்வதியை வழிபடுவதற்கு இன்று உகந்த நேரம். இருப்பினும், சூரிய உதயம் முதல் நண்பகல் வரையிலான நேரம் வழிபாட்டிற்கு சிறந்ததாக கருதப்படுகிறது. 


ஜோதிடத்தின் படி, இன்று சித்த-சத்ய யோகம், புதாதித்ய யோகம் மற்றும் கேதார யோகம் ஆகியவற்றின் சிறப்பு சேர்க்கைகள் உருவாகி வருகின்றன. புத்தாதித்ய யோகம் மாணவர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. 


ALSO READ: சிவலிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா? அல்லது ஆலயத்தில் மட்டுமே தரிசிக்க வேண்டுமா?


பசந்த பஞ்சமி அன்று சரஸ்வதி தேவிக்கு இந்த 5 பொருட்களை வழங்குங்கள்


* சாஸ்திரங்களின்படி, பசந்த பஞ்சமியில் (Panchami) மஞ்சள் நிறத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. அத்தகைய சூழ்நிலையில், சரஸ்வதி தேவியை மஞ்சள் ஆடை அணிந்து வணங்க வேண்டும்.


* காலையில் நீராடிவிட்டு, சரஸ்வதி தேவிக்கு மஞ்சள் நிற ஆடைகளை சமர்ப்பிக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் சரஸ்வதி மாதாவிடம் இருந்து அறிவு மற்றும் ஞானத்தின் ஆசீர்வாதத்தைப் பெறலாம்.


* சரஸ்வதிக்கு வெள்ளை மற்றும் மஞ்சள் பூக்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அத்தகைய சூழ்நிலையில், வழிபாட்டின் போது வெள்ளை மற்றும் மஞ்சள் மலர்களை சுவாமிக்கு வழங்குங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் சரஸ்வதியின் சிறப்பு அருள் கிடைக்கும்.


* கற்றல் மற்றும் அறிவின் தெய்வம் சரஸ்வதி. அத்தகைய சூழ்நிலையில், ஒரு புத்தகம் மற்றும் பேனாவை தாய்க்கு அர்ப்பணிக்க வேண்டும், ஏனெனில் இதைச் செய்வதன் மூலம் புதன் கிரகம் வலுவடையும். மேலும் தோஷங்கள் நீங்கும். இத்துடன் கல்வியில் வெற்றியும் கிடைக்கும். 


* சரஸ்வதி தேவியின் வழிபாட்டின் போது, ​​மஞ்சள் நிற பிரசாதம் மற்றும் மஞ்சள் சந்தனத்தை அர்ப்பணிக்க வேண்டும். 


இன்று சரஸ்வதி பூஜை செய்ய உகந்த நேரம்
பஞ்சமி திதி ஆரம்பம்: பிப்ரவரி 5ம் தேதி அதிகாலை 3.47 மணி முதல்
பஞ்சமி திதி முடியும்: பிப்ரவரி 6ம் தேதி அதிகாலை 3.46 மணி வரை
வழிபாட்டிற்கு உகந்த நேரம் - பிப்ரவரி 5 காலை 07:07 முதல் மதியம் 12:35 வரை


வசந்த் பஞ்சமி சரஸ்வதி பூஜை செய்ய உங்களுக்கு தேவையான பொருட்கள்
வசந்த பஞ்சமி பூஜைக்கு பூஜை சாமாங்களைத் தவிர, மாவிலை, சந்தனம், மஞ்சள், அக்ஷதை, குங்குமம், சரஸ்வதி யந்திரம் மலர்கள் ஆகியவை தேவைப்படும். பொதுவாக பூஜையின் போது மஞ்சள் ஆடைகளை அணிந்துகொள்வதும், கேசரி, எலுமிச்சை சாதம், குங்குமப் பூ போட்ட பாயாச வகைகள் ஆகிய மஞ்சள் நிற பிரசாதங்களை அன்னைக்கு படைப்பதும் சிறப்பு. இந்து மதத்தைப் பொறுத்தவரை, ஒவ்வொரு பூஜைக்கும் ஒவ்வொரு விதி கூறப்பட்டிருந்தாலும், மனதில் இருக்கும் நம்பிக்கையும், பூஜை செய்ய வேண்டும் என்ற எண்ணமும்தான் முக்கியமானவையாக கருதப்படுகின்றன. நம்மிடம் இருக்கும் பொருட்களைக் கொண்டு தூய்மையான மனதோடு செய்யப்படும் பூஜைகயிலும் கடவுள் ஆனந்தம் கொண்டு அருளைப் பொழிகிறார்.


சரஸ்வதி பூஜை செய்வது எப்படி
வசந்த் பஞ்சமி பூஜையைத் தொடங்க, ஒரு மணை அல்லது மர பலகையில், மஞ்சள் / சிவப்பு துணியைப் பரப்பி, அதன் மீது சரஸ்வதி தேவியின் புகைப்படம் அல்லது சிலையை வைக்கவும். உங்கள் புத்தகங்களை அல்லது உங்கள் குழந்தைகளின் பள்ளி புத்தகங்களை சரஸ்வதி தேவியின் காலடியில் வைக்கவும்.


நெய் / எண்ணெய் கொண்டு விளக்கை ஏற்றி, தூபங்களையும் ஏற்றி வைக்கவும். உங்களுக்கு தெரிந்த மந்திரங்களை சொல்லி, அட்சதை, குங்குமம் மற்றும் மலர்களால் அன்னைக்கு பூஜை செய்யவும். உங்கள் பிரார்த்தனையையும், பிரசாதங்களையும் பக்தியையும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்னை சரஸ்வதியை அழைக்கவும்.


பொதுவாகவே பஞ்சமி (Panchami) திதி என்பது சப்த மாதர்களில் ஒருத்தியாகத் திகழும் வாராஹி தேவியை வழிபடுவதற்கு உரிய நாள். வசந்த காலத்தில் வரும் நவராத்திரியை ஷ்யாமளா நவராத்திரி என்பது வழக்கம். எனவே சியாமளா நவராத்திரி காலத்தில், வசந்த பஞ்சமி திதியில், அம்பிகையை மனமுருக, ஆத்மார்த்தமாக வழிபட்டால், துஷ்ட சக்திகள் அண்டாது. எதிர்ப்புகள் தவிடுபொடியாகும். இல்லத்தில் இதுவரை தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள், மங்கல விசேஷங்கள் தடையின்றி நிகழும்.


சரஸ்வதி பூஜைக்கான பூஜை மந்திரத்தை அறிந்து கொள்ளுங்கள்
வசந்த பஞ்சமி சரஸ்வதி பூஜையின் போது பொதுவாக கூறப்படும் மந்திரம் இதுதான்:


யா குந்தேந்து துஷாரஹாரதவலா யா ஶுப்ரவஸ்த்ராவ்ருதா


யா வீணாவரதண்டமண்டிதகரா யா ஶ்வேதபத்மாஸனா .


யா ப்ரஹ்மாச்யுதஶங்கரப்ரப்ருதிபிர்தேவைஸ்ஸதா பூஜிதா


ஸா மாம் பாது ஸரஸ்வதீ பகவதீ நிஶ்ஶேஷஜாட்யாபஹா


தோர்பிர்யுக்தா சதுர்பிம் ஸ்படிகமணினிபை ரக்ஷமாலாந்ததானா


ஹஸ்தேனைகேன பத்மம் ஸிதமபிச ஶுகம் புஸ்தகம் சாபரேண ।


பாஸா குந்தேந்துஶங்கஸ்படிகமணினிபா பாஸமானாऽஸமானா


ஸா மே வாக்தேவதேயம் நிவஸது வதனே ஸர்வதா ஸுப்ரஸன்னா


ஸுராஸுராஸேவிதபாதபங்கஜா கரே விராஜத்கமனீயபுஸ்தகா ।


விரிஞ்சிபத்னீ கமலாஸனஸ்திதா ஸரஸ்வதீ ந்ருத்யது வாசி மே ஸதா


எங்கள் வாசகர்களுக்கு மகிழ்ச்சியான வசந்த பஞ்சமி சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள். 


ALSO READ: இறைவழிபாட்டில் பசுவுக்கும், பாம்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?