Bathing Tips: தினமும் குளிப்பதால் உங்கள் உடல் மிகவும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். தினமும் குளித்தால் உங்கள் உடலின் பாக்டீரியாவை நீக்குவது மட்டுமல்லாமல், அந்த நபருக்கு புத்துணர்ச்சியையும் தருகிறது. ஆயுர்வேதத்தில் குளிப்பது மிகவும் முக்கியமானது என்று விவரிக்கப்பட்டுள்ளது. குளிக்கும்போது உடலின் ஆற்றல் அதிகரிக்கிறது மற்றும் சோம்பலை குணப்படுத்தும். ஒரு சில நேரம் குளித்தப்பின்பும் உடலில் இருக்கும் சோர்வு அலுப்பை தவிர்க்க முடியாமல் போகிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மன அழுத்தம் எதுவும் இல்லாமல் நன்றாக உணர நாங்கள் உங்களுக்கு ஒரு சில டிப்ஸ் இங்கே கொடுக்க உள்ளோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதலில், உடலின் இந்த பகுதியில் தண்ணீர் ஊற்றவும்
பெரும்பாலான மக்கள் முதலில் குளிக்கும்போது (Bathing) தலையில் தண்ணீர் ஊற்றுகிறார்கள். அவ்வாறு செய்வது மூளையின் நரம்புகளை சேதப்படுத்தும். எனவே, குளிக்கும் போது, முதலில் காலில் தண்ணீர் வேண்டும் இது உங்கள் உடலில் உள்ள நீரின் வெப்பநிலையை (Body Temperature) சரியாக வைக்க உதவும். இது தவிர, நீங்கள் மன அழுத்தத்துடன் போராடுகிறீர்களானால், முதலில் கழுத்தின் பின்புறத்தில் தண்ணீர் ஊற்றி குளிக்கவும். இதற்குப் பிறகு, முழு உடலிலும் தண்ணீர் ஊற்றி குளிக்கவும். இதைச் செய்வதன் மூலம், மன அழுத்தமும், கழுத்தின் வலியும் குணமாகும்.


ALSO READ | முறையான உணவில் எடையை குறைக்கலாம்...


இந்த நேரத்தில் குளிப்பதை தவிர்க்கவும்
பெரும்பாலான மக்கள் அவர்களுக்கு ஏற்றவாறு எந்த நேரத்திலும் குளிப்பார்கள். ஆனால் சாப்பிட்டவுடன் குளித்தால், கை, கால், உடல் பகுதிகளுக்கு ரத்த ஓட்டம் சென்று, ஜீரண உறுப்புகளுக்கு போதிய ரத்த ஓட்டம் (Blood Circulation) இருக்காது. நாளைடைவில் ஜீரண உறுப்புக்கள் வலுவிழந்து விடும். குளித்தால் முக்கால் மணி நேரத்திற்கு பிறகு தான் சாப்பிட வேண்டும். சாப்பிட்டால் இரண்டரை மணி நேரத்திற்கு பிறகு தான் குளிக்க வேண்டும். 


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR