2022 ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. 15 பேர் கொண்ட அணியை மிதாலி ராஜ் வழிநடத்துவார்...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வியாழனன்று (ஜனவரி 06), 2022 ODI இந்திய மகளிர் உலகக் கோப்பைக்கான (World Cup Cricket ODI) 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது. 2017 ஆம் ஆண்டிற்கு பிறகு, ன் நடுப்பகுதியில் இங்கிலாந்து நடத்திய போட்டிக்குப் பிறகு, நியூசிலாந்தில் இந்தப் போட்டிகள் நடைபெற உள்ளது.


15 பெண்கள் அணியை கிரிக்கெட்டர் மிதாலி ராஜ் வழிநடத்துவார், அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமியும் அணியில் இடம் பெற்றிருக்கிறார். ஒருநாள் போட்டித்தொடர் வரலாற்றில் இரண்டு முறை ரன்னர்-அப் ஆக இருக்கும் அணி, முதல் முறையாக இந்த பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற உத்வேகத்தில் இருக்கிறது.


Also Read | தொடங்குவதற்கு முன்பே நிறுத்தப்பட்ட இந்திய கிரிக்கெட் லீக் போட்டிகள்!


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2017ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில்175 ரன்கள் விளாசிய ஹர்மன்ப்ரீத் கவுர், மகளிர் கிரிக்கெட் அணியின் துணைத் கேப்டனாக தக்கவைக்கப்பட்டுள்ளார். அனுபவசாலியான ஸ்மிருதி மந்தனாவும் அணியில் இடம் பெற்றுள்ளார். 


ஷேபாலி வெர்மன், தனியா பாட்டியா என இளம் பட்டாளமும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளது. கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்டில் டிரா செய்வதற்கு காரணமான ஸ்னே ராணா, பூனம் யாதவ், ராஜேஸ்வரி கயக்வாட் ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.  



2022 உலகக் கோப்பைக்கான இந்திய மகளிர் அணி:


மிதாலி ராஜ் (கேப்டன்), ஹர்மன்ப்ரீத் கவுர் (துணை கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, யாஸ்திகா, தீப்தி, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), சினே ராணா, ஜூலன் கோஸ்வாமி, பூஜா, மேக்னா சிங், ரேணுகா தாக்கூர், தனியா பாட்டியா (டபிள்யூ கே), ராஜேஸ்வரி, பூனம் யாதவ்.



மார்ச் 4 ஆம் தேதி தொடங்கும் ஒரு நாள் உலகக்கோப்பை போட்டிகளில், போட்டிகளை நடத்தும் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்கிறது.


இறுதிப் போட்டி ஏப்ரல் 3 ஆம் தேதி நடைபெறும். இந்திய அணி, மார்ச் 6 ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்குகிறது.  மொத்தம் 31 போட்டிகள் நடைபெறவுள்ளன.  


ALSO READ | 2018-ல் இந்திய அணிக்கு அடித்த அதிர்ஷ்டம்...! வரலாறு திரும்புமா?


இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ்,  பெண்கள் கிரிக்கெட்டின் சச்சின் டெண்டுல்கர் என்று அழைக்கப்படுபவர். இந்திய பெண்கள் கிரிக்கெட்டின் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் என்றும் சொல்லலாம்.


மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி (Team India) பெண்கள் கிரிக்கெட்டை உலக கோப்பை வரை அழைத்து சென்று அவர்களின் மீது கவனத்தை செலுத்தச் செய்தது.  


2017 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.   


ஆண்கள் கிரிக்கெட் மீதான ஒரு ஈர்ப்பு பெண்கள் கிரிக்கெட்டின் மீது இல்லை என்ற விமர்சனத்தை மாற்றி காட்டியவர் மிதாலி ராஜ். மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இந்த ஆண்டு மகுடம் சூடுமா?


ALSO READ | 2nd Test: SA வெற்றி முகம்..! இந்தியாவை காப்பாற்றுவாரா வருண பகவான்?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR