பொது கழிப்பறை பயன்படுத்துவதன் மூலமும் (குறிப்பாக மேற்கத்திய கழிப்பறைகளை பயன்படுத்துவதால்) கொரோனா பரவலாம் என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Wester Toilet எனப்படும் மேற்கத்திய கழிப்பறைகளை பயன்படுத்திய பின்னர் சுத்தம் செய்கையில் (flusihing) கொரோனா பரவுவதற்கான சாத்தியகூறுகள் அதிகம் இருப்பதாக ஆராய்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த வகை கழிப்பறைகளை சுத்தம் செய்கையில் வலுவான கொந்தளிப்பு உண்டாகிறது. அதாவது இந்த கொந்தளிப்பின் போது சுமார் ஒரு மீட்டர் தூரத்திற்கு ஏரோசல் துகள்களை வெளியேற்றுவதாக குறிப்பிடப்படுகிறது. இதன் காரணமா, கொரோனா தொற்று உள்ளவர் பயன்படுத்திய கழிவறையினை பின்னர் மற்றொரு நபர் பயன்படுத்தி சுத்தம் (flusihing) செய்கையில், அவருக்கு எளிமையாக கொரோனா தொற்று பரவ வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


கழிவறை கட்டி தருவதாக ஏமாற்றி வந்த தந்தை மீது சிறுமி வழக்கு...


சீனாவின் யாங்ஜோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுப்படி, ஒரு சுத்திகரிக்கப்பட்ட கழிப்பறையிலிருந்து வரும் நீர் ஒரு மீட்டர் அளவுக்கு காற்றில் தெளிக்க முடியும் என்பதை விவரித்துள்ளது.


‘இயற்பியல் திரவங்கள்’ இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில், அதிவேக காற்றோட்டம் கழிப்பறைக்கு மேலே காற்றில் உயரமான ஏரோசல் துகள்களை வெளியேற்றி, வைரஸ் பரவ அனுமதிக்கும் என்று கூறுகிறது.


ஒரு கழிப்பறை அடிக்கடி பயன்படுத்தப்படும்போது வேகம் இன்னும் அதிகமாக இருக்கும் என்றும் இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ஒரு பிஸியான நேரத்தில் ஒரு குடும்ப கழிப்பறை அல்லது பொது மக்கள் கழிப்பறை அடர்த்தியான பகுதிக்கு சேவை செய்வது போன்றவை அந்த கழிப்பறையின் வேகத்தை அதிகரிக்கும் என்று ஆய்வு ஆசிரியர் ஜி-சியாங் வாங் தெளிவுபடுத்தியுள்ளார்.


"மொத்த துகள்களின் எண்ணிக்கையில் சுமார் 40 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை கழிப்பறை இருக்கைக்கு மேலே உயர்ந்து பெரிய பரப்பளவு ஏற்படக்கூடும், இந்த துகள்களின் உயரம் தரையில் இருந்து 106.5 செ.மீ வரை அடையும்" என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


3 வருடமாக டாய்லெட்டில் வசிக்கும் மூதாட்டி!!...


இந்த பிரச்சனையை சமாளிக்க ஒரு உதவி குறிப்பினையும் ஆய்வு ஆசிரியர் தெரிவித்துள்ளார். அதாவது கழிவறையினை பயன்படுத்திய பின்னர் சுத்தம் செய்வதற்கு முன்னதாக கழிவறையின் மூடியினை மூடி சுத்தம் செய்ய வேண்டும் என குறிப்பிடுகின்றார். இதன் காரணமாக காற்றில் பறக்கும் தெளிப்பு துளிகள் மூடிக்குள் அடங்கிவிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


சுத்தம் (Flush) செய்யும் மற்றும் கதவு கைப்பிடியில் வைரஸ் துகள்கள் இருக்கலாம் என்பதால், பயனர்கள் கைகளை கவனமாக கழுவவும் அவர் அறிவுறுத்துகிறார்.