புதுடெல்லி:  சில ராசிக்காரர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுவார்கள், சிலர் தங்கள் வாழ்க்கையை மிகவும் இயல்பான முறையில் வாழ விரும்புகிறார்கள். 
சில ராசிக்காரர்கள் சாகசம் செய்வதில் ஆர்வமாக இருப்பார்கள். சில ராசிக்காரர்கள் கூச்ச சுபாவமுள்ளவர்கள். இது தவிர, சில ராசிக்காரர்கள் பகை கொள்வதில் வல்லவர்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவ்வாறு ஜோதிடம், ஒவ்வொரு ராசியின் பலம் மற்றும் பலவீனத்தைப் பற்றி குறிப்புகளை சொல்கிறது. அந்த ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஆனால், இவை அனைத்துமே பொதுப்படையான பலன்கள் தான் என்பதையும் மறந்துவிடக்கூடாது.


மேஷம்


இந்த ராசிக்காரர்கள் பெருமித குணம் கொண்டவர்களாகக் கருதப்படுகிறார்கள். மேஷ ராசிக்காரர்கள் (Zodiac Sign) பெரும்பாலும் தங்களை மற்றவர்களை விட உயர்ந்தவர்களாக கருதுவார்கள். இந்த மனநிலையால் சில சமயங்களில் மற்றவர்களுக்கு அநீதி இழைக்கும் செயல்களையும் செய்கிறார்கள். 


தங்களுடைய ஈகோவினால், இந்த ராசிக்காரர்கள் பிறரிடம் நல்ல நண்பர்களாக தொடர மாட்டார்கள். அதுமட்டுமல்ல, இந்த ராசிக்காரர்கள் மிக விரைவில் ஒருவரை எதிரியாக்கி விடுவார்கள்.


மேலும் படிக்க | பணம்,அடைக்கலம் புகும் நபர்கள் இந்த ராசிக்காரர்கள்


சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் முதலில் யாருடனும் பகை கொள்ளாவிட்டாலும், யாரேனும் அவர்களுடைய அதிகாரத்துடன் விளையாடும் போது, ​​அவர்களை எதிரியாக்க அதிக நேரம் எடுப்பதில்லை. இந்த ராசிக்காரர்கள் யாரையாவது எதிரியாக்கிக் கொண்டால், கடைசி மூச்சு வரை விரோதம் பாராட்டுவார்கள். 


எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. கோபம் வந்துவிட்டால் இந்த ராசிக்காரர்கள் ஆக்ரோஷமானவர்களாகவும், சூழ்நிலை மறந்தவர்களாகவும் மாறிவிடுவார்கள். அதிக உணர்ச்சிவசப்பட்டு, எதிரிகளாக மாறினால் அவர்களின் மனோபாவத்தை மாற்றுவது கடினம். 


விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் மற்றவர்களைவிட உயர்ந்தவர்களாக இருக்க விரும்புகிறார்கள். இருந்தாலும், மற்றவர்களிடம் கோபப்படும்போது, ​​வார்த்தைகளை அனாவசியமாக விட்டுவிடுவார்கள். கோபம் வந்தால் எந்த எல்லைக்கும் செல்லத் தயங்க மாட்டார்கள்.


தங்கள் வேலையில் யாருடைய தலையீடும் அவர்களுக்குப் பிடிக்காது. அவர்களின் வேலையில் யாராவது தலையிட்டால், எதிரில் இருப்பவர்களின் கதி அதோகதிதான். எனவே, விருச்சிக ராசிக்காரர்களிடம் கவனமாகப் பேச வேண்டும். அவர்களுடன் எப்போதும் சரியான இடைவெளியை கடைபிடிப்பது நல்லது.


மேலும் படிக்க: சனி, குரு உட்பட இந்த கிரகங்களின் நிலைகளில் மாற்றம்: யாருக்கு ஆபத்து?


தனுசு 
தனுசு ராசிக்காரர்கள் நீண்ட நாட்கள் யாரையும் வெறுக்க மாட்டார்கள். பகையை பொறுக்க மாட்டார்கள், விட்டுக் கொடுக்கவும் மாட்டார்கள். ஒருவரிடம் வன்மம் ஏற்பட்டால், பழிவாங்கத் தயங்க மாட்டார்கள்.


இந்த ராசிக்காரர்கள் நண்பர்களை உருவாக்குவதிலோ, பயணங்களிலோ நேரத்தை வீணடிக்க மாட்டார்கள். அவர்களின் கவனம் தொழில் மற்றும் வேலையில் மட்டுமே அதிகமாக இருக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | இந்த 4 ராசிக்காரர்களுக்கு அற்புதம்; இன்னும் 33 நாட்களுக்குப் பிறகு சனி உதயம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR