ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்களின் இயக்கத்தில் மிகப்பெரிய தலைகீழ் மாற்றம் ஏற்படப் போகிறது. பிப்ரவரி 23 ஆம் தேதி குரு பகவான் அஸ்தமிப்பார். இதையடுத்து பிப்ரவரி 26-ம் தேதி செவ்வாய் மகர ராசிக்குள் நுழைகிறார். பிறகு மறுநாள் சுக்கிரனும் இந்த ராசிக்குள் நுழைவார்.
இதன் விளைவாக சதுர்கிரஹி யோகம் உருவாகும். இது மார்ச் 6 வரை இருக்கும். பிப்ரவரி 27-ம் தேதி சனி பகவான் மகர ராசியில் உதயமாகிறார். கிரகங்களின் இந்த திடீர் பெரிய மாற்றத்தால் அனைத்து ராசிகளும் பாதிக்கப்படும். இந்த கிரக மாற்றத்தால் எந்தெந்த ராசிகளுக்கு என்னென்ன பாதிப்புகள் இருக்கும் என இந்த பதிவில் காணலாம்.
குரு அஸ்தமனம் (பிப்ரவரி 23 முதல் மார்ச் 27 வரை)
ஜோதிட சாஸ்திரத்தின்படி, பிப்ரவரி 23 ஆம் தேதி, தேவகுரு வியாழன் கும்பத்தில் அஸ்தமிக்கிறார். தேவகுரு பிருஹஸ்பதி மார்ச் 27 வரை இந்த நிலையில் இருப்பார். வியாழன் அஸ்தமனமாவது மேஷம், மிதுனம், சிம்மம், துலாம் மற்றும் மகரம் ஆகிய ராசிகளுக்கு சாதகமாக அமையும். அதேசமயம் வியாழனின் இந்த நிலை ரிஷபம், கடகம், கன்னி, தனுசு, கும்பம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகளை உருவாக்கும். இத்தகைய சூழ்நிலையில், இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
பிப்ரவரி 26ம் தேதி செவ்வாய் மகர ராசிக்குள் நுழைகிறார்
பிப்ரவரி 26-ம் தேதி செவ்வாய் மகர ராசியில் பிரவேசிக்கிறார். இதனால் விருச்சிகம், சிம்மம், மீன ராசிக்காரர்களுக்கு நன்மைகள் உண்டாகும். மறுபுறம், மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
பிப்ரவரி 27ல் சனி உதயமாகும்
பிப்ரவரி 27-ம் தேதி சனிபகவான் மகர ராசியில் உதிக்கிறார். விருச்சிகம், சிம்மம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் சனிபகவானின் உதயத்தால் நன்மை உண்டாகும். அதேசமயம் கடகம், மிதுனம், ரிஷபம், மேஷம், கன்னி, மகரம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பிப்ரவரி 27ஆம் தேதி சுக்கிரன் மகர ராசிக்குள் நுழைகிறார்
பிப்ரவரி 27ஆம் தேதி சுக்கிரன் மகர ராசிக்குள் நுழைகிறார். சுக்கிரனின் இந்த மாற்றத்தின் தாக்கம் 59 நாட்களுக்கு இருக்கும். மேஷம், கடகம் மற்றும் சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த சுக்கிரனின் சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும். மறுபுறம், இது ரிஷபம், மீனம், மிதுனம், கும்பம், கன்னி, மகரம், துலாம், விருச்சிகம் மற்றும் தனுசு ராசியினருக்கு சுக்ரனின் இந்த சஞ்சாரத்தால் சங்கடம் உண்டாகலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | இந்த 4 ராசிக்காரர்களுக்கு அற்புதம்; இன்னும் 33 நாட்களுக்குப் பிறகு சனி உதயம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR