Alert! ஆன்லைனில் DL அப்ளை செய்கிறீர்களா; மோசடிக்கு பலியாகாதீர்கள்..!!
ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கப் போகிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த செய்தியைப் படியுங்கள். சில போலி வலைத்தளங்கள் மூலம் சிலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஓட்டுநர் உரிமத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்பது பலருக்கு உபயோகமாக உள்ள போதிலும், சிலர் மோசடியாளர்கள் இதைப் பயன்படுத்திக் கொண்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிப்பதற்கான அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை போலவே இயங்கும் போலி இணையதளங்கள் உள்ளன. இந்த போலி இணையதளங்கள்ஓட்டுநர் உரிமம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுகின்றன.
3300 பேர் ஆன்லைன் மோசடிக்கு பலியாகினர்
இந்த போலி வலைதளங்கள் மூலம், சுமார் 3300 பேர் ஏமாற்றப்பட்டுள்ளனர். காஜியாபாத் ராஜ்நகரில் வசிக்கும் 30 வயதான கபில் தியாகி என்பவர், போலி வலைதளத்தின் மூலம் 3300 பேரை ஏமாற்றியுள்ளார். சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகத்திற்கு தகவல் கிடைத்து விசாரணை செய்ததில், கபில் தியாகி, இந்த மோசடி மூலம் 70 லட்ச ரூபாய்க்கு மேல் சம்பாதித்த்துள்ளது தெரிய வந்துள்ளது.
ALSO READ | Education Loan: கல்விக்கடன் எடுக்கும் முன் மனதில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்.!
போக்குவரத்து அமைச்சகம் சைபர் செல்லில் புகார் அளித்தது
போக்குவரத்து அமைச்சகத்தின் இயக்குநர் பியூஷ் ஜெயின், டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவின் சைபர் குற்ற பிரிவில் புகார் அளித்தார். அதன் பிறகு விசாரணை செய்ததில், மக்கள் கூகிளில் ஓட்டுநர் உரிமத்தை ஆன்லைனில் விண்ணப்பிபதற்கான இணைப்பை தேசிய போது, E-parivahanindia.online, www.roadmax.in மற்றும் Sarathiparivahan.com என பெயரிடப்பட்ட இணையதளங்களின் இணைப்பு, முதலில் வருவதை கண்டறிந்தனர். இதனை, உண்மையான அரசு இணையதளம் எனக் கருதி, பாதிக்கப்பட்டவர் தனது விவரங்களை அதில் நிரப்பி பணம் செலுத்தியுள்ளார்கள். பணம் செலுத்தியும், டிரைவிங் லைசன்ஸ் கிடைக்காததால், பாதிக்கப்பட்ட மக்கள் போக்குவரத்து அமைச்சகத்திடம் புகார் செய்தனர்.
தொடர்ச்சியான புகார்களைப் பெற்ற பிறகு, சைபர் குற்ற பிரிவு சிறப்பு குழுவை அமைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்த மோசடியில் ஈடுபட்ட கபில் தியாகி, கைது செய்யப்பட்டார் . போலீஸ் விசாரணையில் கபில் தனது பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கும் மோசடி செய்த பெற்ற பணத்தை செலுத்தியிருப்பது தெரியவந்தது.
ALSO READ | Post Office Schemes: பணத்தை இரட்டிப்பாக்கும் சூப்பர் முதலீட்டு திட்டங்கள்..!!!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR