தற்போது தீபாவளி மற்றும் சத் பண்டிகையை முன்னிட்டு கூட மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரெயில்வே பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ரயில் நிலையத்திலும் கூட்டம் அலைமோதுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில சரக்கு பொருட்ககளுக்கு ரயில்வே தடை விதித்துள்ளது. அந்த பொருட்களுடன் பயணிகள் ரயிலில் பயணிக்க முடியாது. மீறுவோருக்கு சிறை தண்டனையும், அபராதமும் காத்திருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எடுத்துச் செல்லக்கூடாத பொருட்கள்


ரயில்களில் பட்டாசுகளை கொண்டு செல்லக்கூடாது. ரயிலில் எரியக்கூடிய மற்றும் வெடிக்கும் பொருட்களை கொண்டு செல்வது தண்டனைக்குரிய குற்றமாகும். பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், பட்டாசு, கேஸ் சிலிண்டர், கன் பவுடர் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துக்கொண்டு ரயிலில் பயணம் செயக்கூடாது.


மேலும் படிக்க | SBI FD Rate Hike: கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு பம்பர் பரிசு அளித்த SBI


ரயில்வே எச்சரிக்கை


இது தொடர்பாக முன்னெச்சரிக்கை பதிவு மற்றும் அறிவுரைகளை வழங்கியிருக்கும் இந்திய ரயில்வே, அனைத்து ரயில் நிலையங்கள் இது தொடர்பான போஸ்டர்களை ஒட்டியிருக்கிறது. அதில், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை ரயிலில் எடுத்துச் செல்ல வேண்டாம். அவை மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும். பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், பட்டாசு, கேஸ் சிலிண்டர், கன் பவுடர் போன்ற பொருட்களை கொண்டு செல்லாதீர்கள் என பயணிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளது.  



தண்டனை


ரயிலுக்குள் அடுப்பு, கேஸ், ஓவன் போன்றவற்றை பற்றவைக்க வேண்டாம். அதே நேரத்தில், ரயில் பெட்டியிலோ அல்லது ரயில் நிலையத்திலோ சிகரெட்டைப் பற்றவைக்காதீர்கள். ரயிலில் எரியக்கூடிய மற்றும் வெடிக்கும் பொருட்களை எடுத்துச் செல்வது பிடிபட்டால், அது ரயில்வே சட்டம் 1989 பிரிவு 164 மற்றும் 165ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். அத்தகைய வழக்கில், அவருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.


மேலும் படிக்க | இலவச ரேஷன் வாங்குபவர்களுக்கு லாட்டரி; அசத்தல் தீபாவளி பரிசு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEata