எஃப்டி விகித உயர்வு: தீபாவளியை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ சிறப்பான பரிசை வழங்கியுள்ளது. நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்.பி.ஐ., இந்த முறை வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வழங்கியுள்ளது. எஸ்பிஐயின் இந்த முடிவு வங்கியின் 44 கோடி வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கப்போகிறது. இந்த உயர்வு அனைத்து கால அளவுகளுக்கும் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வங்கியின் இந்த முடிவால் மூத்த குடிமக்கள் அதிக பயனடைவார்கள். எஸ்பிஐ அதன் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 1% கூடுதல் எஃப்டி வட்டி அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்பிஐ ஓய்வூதியம் பெறுபவர்கள் 5 முதல் 10 ஆண்டுகள் வரை FD களில் 7.65% வட்டியைப் பெறலாம்.
வட்டி விகிதங்களில் பம்பர் உயர்வு
எஸ்பிஐ தனது எஃப்டி விகிதங்களை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. வங்கி நிலையான வைப்பு (எஃப்டி) விகிதங்களில் 80 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. வங்கியின் புதிய வட்டி விகிதங்கள் ரூ. 2 கோடிக்கும் குறைவான எஃப்டிகளுக்குப் பொருந்தும். மேலும் இந்த மாற்றங்கள் அக்டோபர் 22, 2022 முதல் பொருந்தும். சமீபத்திய கட்டணங்களை அறிந்து கொள்வோம்.
SBI இன் புதிய வட்டி விகிதங்களை அறிந்து கொள்வோம்:
- 211 நாட்கள் முதல் 1 வருடத்திற்கும் குறைவான காலவரையறை கொண்ட FD-கள் 80 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 5.50% ஆக உள்ளது.
- 180 நாட்கள் முதல் 210 நாட்களுக்குள் மெச்யூர் ஆகும் FDகளுக்கு 4.65% வட்டியை வழங்குகிறது.
- 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகளுக்கும் குறைவான காலவரையறை கொண்ட FD-களுக்கான வட்டி 5.65%லிருந்து 6.25% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- 46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையிலான கால அளவிற்கான விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 4.50% ஆக உள்ளது.
மேலும் படிக்க | இலவச ரேஷன் வாங்குபவர்களுக்கு லாட்டரி; அசத்தல் தீபாவளி பரிசு
- 1 ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்கு குறைவாக உள்ளவற்றுக்கான வட்டி 5.60% லிருந்து 6.10% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகளுக்கும் குறைவான FD-களுக்கு 6.10% வட்டி கிடைக்கும்.
- 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான FD-களுக்கு 6.10% வீதத்திலும், 10 ஆண்டுகள் வரையிலான 6.10% வீதத்திலும் வட்டி செலுத்தப்படுகிறது.
- 7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையிலான கால அளவுக்கு வட்டி விகிதம் 3% ஆக மாறாமல் இருக்கும்.
மூத்த குடிமக்களுக்கான SBI FD புதிய கட்டணங்கள்
- மூத்த குடிமக்களுக்கு ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் வரையிலான கால அளவுக்கு 6.90% வட்டி வழங்கப்படுகிறது.
- 211 நாட்களில் இருந்து 1 வருடத்திற்கும் குறைவான காலத்துக்கு 6% வழங்கப்படும்.
- 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான கால அளவுக்கு 6.60% வீதம் வழங்கப்படுகிறது.
- 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திற்கான FD-களுக்கு 50 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டு, 6.15% லிருந்து 6.75% ஆக உள்ளது.
- 1 ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் தற்போதுள்ள 6.10%, 6.60% ஆக மாற்றப்பட்டுள்ளது.
- 46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை 4.5% முதல் 5% வரை வட்டி இருக்கும்.
- 7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையிலான காலத்துக்கு வட்டி மாறாமல் 3.50% ஆக இருக்கும்.
எஸ்பிஐ வி கேர் டெபாசிட் (SBI ‘Wecare Deposit')
- SBI தனது வி கேர மூத்த குடிமக்கள் கால வைப்புத் திட்டத்தின் செல்லுபடியாகும் காலத்தை அடுத்த ஆண்டு மார்ச் 31, 2023 வரை நீட்டிக்கும்.
- மூத்த குடிமக்கள் 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கான டெபாசிட்டுகளுக்கு 30 அடிப்படை புள்ளிகள் கூடுதல் பிரீமியம் வட்டியைப் பெறுகிறார்கள்.
- 5 ஆண்டுகளுக்கு குறைவான சில்லறை கால வைப்புகளுக்கு சாதாரண குடிமக்களை விட 0.50 சதவீதம் கூடுதல் வட்டி கிடைக்கும்.
- சாதாரண குடிமக்களுடன் ஒப்பிடும்போது மூத்த குடிமக்களுக்கு 0.80 சதவீதம் (0.50 +0.30) அதிக வட்டி கிடைக்கும்.
மேலும் படிக்க | உங்கள் ஆதார் நம்பரில் இதுவரை வாங்கப்பட்ட மொபைல் நம்பரை பார்ப்பது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ