வண்ணமய பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மணமகனின் தாடி., வியப்பில் தத்தளிக்கும் மணமகள்., ட்ரண்ட் ஆகும் பூந்தாடி திருமணம்...!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வளர்ந்து வரும் நவநாகரீக உலகில், வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் விசித்திரமாக கழிக்க மக்கள் விரும்புகின்றனர். ஒவ்வொஉரு தருணம் என நினைக்கையில், வாழ்வில் ஒருமுறை(சிலருக்கு) மட்டும் நிகழும் திருமணத்தை மட்டும் விட்டு விடுவார்களா என்ன?



பழமார்கெட்டில் திருமணம், வானில் பறக்கும் விமானத்தில் திருமணம், நடுகடலில் மிதக்கும் கப்பலில் திருமணம் என பல விசித்திரமான, விநோதமான திருமணங்களை நாம் நம் வாழ்வில் பார்த்திருப்போம், அந்த வரிசையில் தற்போது மேலை நாட்டில் பூந்தாடி திருமணம் பிரபலமாகி வருகிறது.


பொதுவாக திருமணங்களில் மணமக்களில் கைகளில் பூங்கொத்து கொடுத்து வரவேற்பது வழக்கம். அந்த வகையில் தற்போது கையில் கொடுக்கும் பூங்கொத்து கலாச்சார வளர்ச்சி கண்டு மணமகனின் தாடியில் அலங்கரிக்கப்படுகிறது.



திருமணத்தின் போது மணமகனின் தாடியை பூக்களால் அலங்கரித்து சிறப்பாக கொண்டாடும் பூங்கொந்து திருமணம் தற்போது மேலை நாடுகளில் பிரபலமாகி வருகின்றது.


வண்ணமயமான பூக்களால் அலங்கரிக்கப்படும் மணமகனின் தாடி, மணமகளின் ஆடைக்கு பொருந்தும் வகையில் வடிவமைக்கப்படுவது இந்த திருமணத்தின் சிறப்பு.



பிரபலமாகி வரும் இந்த புதிய வகை திருமணத்தை குறித்து மேலும் பிரபலமடைய செய்ய மணமக்கள் தங்களது அலங்காரங்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். இணையத்தில் வைரலாகி வரும் இப்புகைப்படங்கள் மூலம் அவர்களது அலங்கார ஆர்வத்தை நாம் புரிந்துக்கொள்ள முடிகிறது. ஆர்வமிகுதியால் சிலர் மர்களை தவிர்த்து, மின்விளக்குகளாலும் தங்களது தாடிகளை அலங்கரித்து வருவதையும் இந்த புகைப்படங்கள் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.