பஞ்சாப் நேஷனல் வங்கி நிலையான வைப்புத் தொகை: பஞ்சாப் நேசனல் வங்கி (PNB) வாடிக்கையாளர்களுக்கு ஒரு பெரிய செய்தி உள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி நிலையான வைப்புத் தொகையில் மாற்றங்களைச் செய்துள்ளது. அந்த வகையில் உங்களுக்கும் இந்த வங்கியில் கணக்கு இருந்தால் அல்லது FD இருந்தால், உடனடியாக இந்த மாற்றத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் பஞ்சாப் நேஷனல் வங்கி சில குறிப்பிட்ட காலங்களின் நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் தற்போது பஞ்சாப் நேசனல் வங்கி (PNB) வங்கி FD விகிதங்களை அரை சதவீதம் அதிகரித்துள்ளது. 2 கோடிக்கு குறைவாக FD (நிலையான வைப்புத் தொகை) செய்த வாடிக்கையாளர்கள் இதன் பலனைப் பெறுவார்கள். வங்கி (Fixed Deposit) நிலையான வைப்புத் தொகையின் புதிய விகிதங்கள் நவம்பர் 1 முதல் அமலுக்கு வந்துள்ளன.


சாதாரண குடிமக்களுக்கு எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது?
பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்கள் 7 முதல் 45 நாட்கள் வரையிலான நிலையான வைப்புத் தொகைக்கு 3.5 சதவீதம், 46 முதல் 179 நாட்கள் வரையிலான நிலையான வைப்புத் தொகையில் 4.5 சதவீதம், 180 நாட்கள் முதல் 270 நாட்கள் வரையிலான நிலையான வைப்புத் தொகையில் 5.5 சதவீதம் வட்டி பெறுகிறார்கள்.


மேலும் படிக்க | இலவச ரேஷன் பெறுவோருக்கு செம ஜாக்பாட் அப்டேட்.. உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்


மூத்த குடிமக்கள் மற்றும் சூப்பர் மூத்த குடிமக்கள்
அதே சமயம் பஞ்சாப் நேசனல் வங்கி மூத்த குடிமக்கள் 50 அடிப்படை புள்ளிகள் அதிக வட்டி பெறுகிறார்கள். இது தவிர, சூப்பர் சீனியர் குடிமக்கள் 80 அடிப்படை புள்ளிகள் அதிக வட்டி பெறுகிறார்கள்.


எந்த காலத்திற்கு அதிக வட்டி கிடைக்கும்?
444 நாட்கள் FDக்கு வங்கியால் அதிக வட்டி வழங்கப்படுகிறது. இதில், சாதாரண குடிமக்களுக்கு 7.25 சதவீதமும், மூத்த முதலீட்டாளர்களுக்கு 7.75 சதவீதமும், சூப்பர் சீனியர் முதலீட்டாளர்களுக்கு 8.05 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது. 60 வயது முதல் 80 வயது வரை உள்ள வாடிக்கையாளர்களுக்கு வங்கியால் கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், வங்கி மிகவும் மூத்த குடிமக்களுக்கு 0.80 சதவீத வட்டி அளிக்கிறது.


PNB இல் FD மீதான வட்டி விகிதங்கள் (பொதுமக்கள்):
7 முதல் 45 நாட்கள் - 3.5%
46 முதல் 179 நாட்கள் - 4.5%
180 முதல் 270 நாட்கள் - 6.0%
271 முதல் ஒரு வருடத்திற்கும் குறைவானது - 6.25%
ஒரு வருடம் - 6.75%
ஒரு வருடம் முதல் 443 நாட்கள் வரை - 6.8%
444 நாட்கள் - 7.25%
445 நாட்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை - 6.8%
இரண்டு ஆண்டுகள் முதல் மூன்று ஆண்டுகளுக்கு மேல் - 7.0%
மூன்று ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை - 6.5%
ஐந்து வருடங்களுக்கு மேல் 10 வருடங்களுக்கும் குறைவானது -6.5%


PNB இல் FD மீதான வட்டி விகிதங்கள் (மூத்த குடிமக்கள்):
7 முதல் 45 நாட்கள் - 4.00%
46 முதல் 179 நாட்கள் - 5.00%
180 முதல் 270 நாட்கள் - 6.00%
271 முதல் ஒரு வருடத்திற்கும் குறைவானது - 6.30%
ஒரு வருடம் - 7.25%
ஒரு வருடம் முதல் 443 நாட்கள் வரை - 7.30%
444 நாட்கள் - 7.75%
445 நாட்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை - 7.30%
இரண்டு ஆண்டுகள் முதல் மூன்று ஆண்டுகளுக்கு மேல் - 7.50%
மூன்று ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை - 7.00%
ஐந்து வருடங்களுக்கு மேல் 10 வருடங்களுக்கும் குறைவானது - 7.30%


மேலும் படிக்க | 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு டபுள் தீபாவளி பரிசு.. உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ