பொதுவாகவே, மணி பிளான்ட்டை வளர்ப்பதால் வீட்டில் செல்வம் பெருகும் என்பார்கள். மேலும் கடன் தொல்லை தீரும் என்ற நம்பிக்கை நமது மக்களின்  மத்தியில் இருந்து வருகிறது. இதை வீட்டில் வளர்த்தாலே பணம் பெருகும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இந்த செடியை எப்படி வளர்க்க வேண்டும் என்று பலருக்கும் தெரிவதில்லை. வாஸ்து நிபுணர்கள் மணி பிளான்ட்டை தென்கிழக்கு திசை நோக்கி தான் வளர்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாஸ்து (Vastu) முறைப்படி மணி பிளான்ட் (Money Plant) செடியை வளர விட்டால் வீட்டில் தேவையற்ற பிரச்சனைகளும் நீங்குவதற்கு வாய்ப்புகள் உண்டு. அதைப் பற்றிய ஒரு அலசல் இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள். தென்கிழக்கு திசையில் தான் அதிகம் பாஸிடிவ் எனர்ஜி கிடைக்கிறது என்பதால், இந்த திசையில் தான் மணி பிளான்ட்  நன்கு வளரும் மற்றும் இதனால் செல்வம் பெருகும் யோகம் பெற முடியும் என வாஸ்து நிபுணர்கள் (Vastu Tips) கூறுகிறார்கள்.


ALSO READ | ஆசிர்வாதம் என்பதன் அடிப்படை என்ன? அது எவ்வாறு செல்வங்களைப் பெற வழி வகுக்கும்


விநாயகரின் திசை தென்கிழக்கு திசை ஆகும். இதன் காரணங்களுக்காக தான் மணி பிளான்ட்டை தென்கிழக்கு திசையில் வைக்க சொல்லி கூறுகிறார்கள்.


மணி பிளாண்ட் செடியை கண்ணாடி குடுவையில் மட்டுமே அடைக்க வேண்டும். அந்த கண்ணாடி குடுவையில் இருக்கும் மண் வளமானதாக இருக்கிறதா? என்பதையும் பார்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் கண்ணாடி குடுவையின் நிறமானது கண்டிப்பாக சிவப்பு நிறத்தில் இருக்கக் கூடாது. மேலும் நீங்கள் மணி பிளான்ட் வைத்திருக்கும் இடத்தை சுற்றிலும் சிவப்பு நிறம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சிகப்பு நிறம் அருகில் மணி பிளான்ட் இருந்தால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துமாம். விதவிதமான வடிவங்களில் இருக்கும் மணிபிளான்ட்டில் இதய வடிவிலான மணிபிளான்ட் வளர்த்து வந்தால் கூடுதல் பலன்களும் கிடைக்கப் பெறும்.


நீங்கள் வீட்டிற்குள் ஒருபோதும் வைக்கக் கூடாத தாவரங்களின் பட்டியல் இங்கே:


  • புளி மரம்

  • கற்றாழை ஆலை

  • பேரீச்சை மரம்

  • மூங்கில் மரம்

  • அரச மரம்


நீங்கள் அறிந்து ஆச்சரியப்படுவீர்கள், ஆனால் ஒரு சில ராசி தாவரங்கள் உள்ளன, அவை உங்கள் சூரிய அடையாளத்தின் படி வீட்டில் வைத்திருப்பது மிகவும் அதிர்ஷ்டம் தரும். அவை:


  • மணி பிளான்ட்

  • துளசி செடி

  • வேம்பு மரம்

  • அதிர்ஷ்ட மூங்கில் செடி

  • சிட்ரஸ் செடி

  • கற்றாழை

  • வாழை மரம்

  • லில்லி செடி


ALSO READ | Vastu Tips: உணவில் மட்டுமல்லாது வாழ்க்கையிலும் சுவையை கூட்டும் உப்பு..!!


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR