காலையில் வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி செய்தால் இவ்வளவு நன்மைகளா?
பொதுவாக உடற்பயிற்சி செய்வது உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. காலையில் எழுத்தும் நடைப்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகளை பற்றி பார்ப்போம்.
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி செய்வது, உடலுக்கு முழுமையான சக்தியை தருகிறது. இது எளிய ஒரு வழி என்றாலும் நல்வாழ்வை ஊக்குவிக்கிறது. இந்த அணுகுமுறையை செய்வதன் மூலம் ஆரோக்கியமான மற்றும் சீரான வாழ்க்கை முறை கொண்டு வரலாம். நமது தினசரி வாழ்க்கையில், சுய பாதுகாப்பிற்கான நேரத்தைக் கண்டுபிடிப்பது மிகவும் சவாலாக இருக்கும். இருப்பினும், தினமும் வெறும் வயிற்றில் காலையில் நடைப்பயிற்சி செய்வது உடலுக்கு பலவித ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. அதிகாலையில் எழுந்து நடைப்பயிற்சி செய்தால் கிடைக்கும் நல்ல விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | குழந்தைகளின் எதிர்கால ஆரோக்கியத்தை உறுதிபடுத்தும் வைட்டமின் பி12 நிறைந்த பழங்கள்!
வளர்சிதை மாற்றம்
காலையில் சாப்பிடும் முன்பு வேகமான நடைப்பயிற்சியில் ஈடுபடுவது, உங்கள் வளர்சிதை மாற்றம் முதல் அன்றைய நாள் முழுவதும் நல்ல செரிமானத்தை ஊக்குவிக்கிறது. இந்த வளர்சிதை மாற்றம் அதிகரிப்பு உடலில் உள்ள அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. மேலும் நல்ல உடல் எடையை பராமரிக்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த மற்றும் எளிமையான வழி ஆகும்.
கொழுப்பை அகற்ற
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் நடப்பது, உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை அகற்றி உடல் எடையை குறைக்க மற்றும் பராமரிக்க உதவுகிறது. இரவு முழுவதும் சாப்பிடாமல் இருப்பதால் கிளைக்கோஜன் அளவைக் குறைக்கிறது, காலையில் நடைபயிற்சியின் போது உடலின் ஆற்றலுக்காக கொழுப்புகளை உடல் பயன்படுத்தி கொள்கிறது. இந்த வழக்கம் காலப்போக்கில் அதிக எடையை குறைக்க உதவும்.
மன அழுத்தம்
காலை நடைப்பயிற்சி செய்யும் போது வாகனங்கள் அதிகமாக இருக்காது. இந்த சமயத்தில் இயற்கை மற்றும் சுத்தமான காற்றை சுவாசிப்பது அமைதியை அதிகப்படுத்தி மற்றும் மன அழுத்தத்தை குறைக்கிறது. காலையில் நடைப்பயிற்சி செய்வது இயற்கையான காலை சூழலுடன் இணைந்து, மன அழுத்த நிவாரணிகளான எண்டோர்பின்களை வெளியிடுகிறது. இந்த பயற்சிகள் எந்தவித செலவும் இல்லமால் மன அழுத்தத்தை குறைக்க உதவும்.
இரத்த சர்க்கரை மற்றும் இதய ஆரோக்கியம்
காலையில் வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி செய்வது உடலில் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தொடர்ந்து காலையில் நடைப்பயிற்சி செய்வது நாள் முழுவதும் நிலையான இரத்த சர்க்கரையை பராமரிக்க உதவும். காலை நடைப்பயிற்சி இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி இரத்த அழுத்தத்தை குறைப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்களிக்கிறது. எந்த வித சிறப்பு உபகரணங்களின் தேவையின்றி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த இது சிறந்த வழியாகும்.
நல்ல தூக்கம்
காலை செய்யக்கூடிய நடைப்பயிற்சியின் நமக்கு இயற்கையான ஒளியை வெளிப்படுத்தி சர்க்காடியன் தாளத்தை சீராக்க உதவுகிறது, இது இரவில் சிறந்த தூக்கத்தை ஊக்குவிக்கிறது. ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் உயிர்ச்சக்தியை பராமரிக்க, உடல் மற்றும் மனதை நன்றாக ஓய்வெடுப்பது முக்கியம்.
காலையில் நடைப்பயணத்தின் போது உடலில் சூரிய ஒளி படுவது வைட்டமின் டி அளவை அதிகரிக்க உதவுகிறது. இந்த அத்தியாவசிய வைட்டமின் உடலுக்கு முக்கியமானது, ஏனெனில் இது நம் உடல் கால்சியத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது.
மேலும் படிக்க | கர்ப்பிணிகளே... ‘இந்த’ பழங்களில் இருந்து கொஞ்சம் விலகியே இருங்க..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ