பெண்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பெங்களூரு விமான நிலையத்தில் பெண் ஓட்டுநர் கொண்ட Pink Taxi சேவை தொடங்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெங்களூருவின் கெம்பகௌடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தனியாக பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, விமான நிலையத்தில் இயக்கப்படும் வாடகை கார் சேவையில், ஒரு பகுதி பிரிக்கப்பட்டு Pink Taxi என்ற பெயரில் இயக்கப்படுகிறது. இந்த Pink Taxi-களில் ஓட்டுநர்கள் பெண்கள் ஆகும், எனவே இரவு நேரத்தில் தனிமையில் பயணிக்க விரும்பும் பெண்கள் இந்த புது சேவையினை பயன்படுத்திக்கொள்ளலாம் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இந்த Pink Taxi-களை இயக்கும் ஓட்டுநர்கள் பன்மொழி திறன் கொண்டவர்கள் எனவும், உள்ளூர் பகுதிகளின் வழிகளை நன்கு அறிந்த, அனுபவம் வாய்ந்த ஓட்டுநர்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், GPRS மற்றும் SOS switch போன்ற பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டு இந்த வாகனங்கள் சேவைக்கு பயன்படுத்துவதால் பயணிகளின் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் அளிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.



இதுகுறித்து கர்நாடகா மாநில சுற்றுலா வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனர் குமார் புஷ்கர் தெரிவிக்கையில்., பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டே இந்த சேவை கொண்டு வரப்பட்டுள்ளது. அதேவேலையில்., பெண் ஓட்நர்களுக்கு வேலை வாய்ப்பினை அதிகரிக்கும் நோக்கத்திலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது" என குறிப்பிட்டுள்ளார்.


இந்த முயற்சியானது கிராமபுர பெண்களின் வேலைவாய்பினை அதிகரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விரைவில் இந்த முறைமை தனியார் துறைகளிலும் செயல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.