கொரோனா வைரஸ் பரவுவதை சமாளிக்க பெங்களூரை தளமாகக் கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனம் தேனி கிராமத்தை நோக்கி நகர்துள்ளது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி தனது பழத்தை கட்டிவருகிறது. சீனாவை அடுத்து இத்தாலி, ஈரான், உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த வைரஸ். இதை தொடர்ந்து தற்போது இந்தியாவில் காலூன்றியுள்ள கொரோனா வைரஸ் தனது பழத்தை கட்ட துவங்கியுள்ளது. இதுவரை இந்தியாவில் 129 பேர் கொரோனா வைரஸ் தோற்றால் பாதிக்கபட்டுள்ளனர். அதில், 13 பேர் குணமடைந்துள்ளனர், மூவர் பலியாகியுள்ளனர். 


இந்நிலையில், சில அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே வேலை (Work From Home) செயலாம் என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பீதியால் வைரஸ் அச்சுறுத்தலை சமாளிக்க, பெங்களூரைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் IT நிறுவன ஊழியர்கள் தமிழ்நாட்டில் உள்ள கிராமத்திற்கு குடிபெயர்ந்துள்ளனர். 


தேனியை சேர்ந்த அரவிந்த் மற்றும் அவரது அமெரிக்க நண்பரானா கேப்ரியல் ஆகியோர் இணைந்து InstaClean என்ற Android IOS APP-யை உருவாக்கும் ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஒன்றை பெங்களூரில் துவங்கியுள்ளனர். அதில், சுமார் 20 ஊழியர்கள் பணிபுரிந்து வந்த நிலையில், இரண்டு வாரங்களுக்கு முன்பு கொரோனா பீதி பரவ ஆரம்பித்துள்ளது. 


இந்நிலையில், தனது நிறுவனத்திற்கு விடுமுறை கொடுத்துவிட்டு தனது சொந்த ஊரான தேனி மாட்டம் தேவாரத்திர்க்கு வந்த அரவிந்த், தனது ஊரை சுற்றியுள்ள இயற்கை எழில் கொஞ்சும் சூழலை ரசிக்க துவங்கியுள்ளார். இதையடுத்து, நாம் ஏன் இங்கேயே இருந்தபடி தனது வேலைகளை செய்யக்கூடாது என்ற எண்ணம் அவர் மனதில் உதித்துள்ளது.   


இதையடுத்து, தனது ஊழியர்கள் பனிரெண்டு நபர்களை தனது கிராமத்திற்கு வரவைத்துள்ளார். இதையடுத்து, தனது பாட்டி சரிஜாவின் பண்ணை வீட்டில் இருந்தபடி தனது ஊழியர்களுடன் தனது பணியை துவங்கியுள்ளார் அரவிந்த். இயற்கை கொஞ்சும் இடத்தில் தளையானைகளுடம் அட்டகாசமாக ஒரு தொப்பிர்க்கு மத்தியில் தனது பணியை செய்து வருகின்றனர். ஜில்லு ஜில்லு என காற்று... கண்கள் சொர்ந்தாள் அதே இடத்தில் ஒரு குட்டி தூக்கம்.... அட்டகாசமான மத்திய உணவு.... மாலைவேலையில் ஊர் சுற்றி பார்ப்பது என அனைத்து வசதிகளுடனும் பணிபுரிந்து வருகின்றனர்.  


"அணியில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் இது ஒரு புதிய அனுபவம். அவ்வாறு செய்வது சாத்தியமில்லை என்று யாரும் நினைக்கவில்லை, அவர்களுடைய சந்தேகங்களும் இருந்தன. ஆனால், அங்கு சென்று அனுபவத்தை வாழ்ந்த பிறகு, ஒவ்வொரு உறுப்பினருக்கும் தனித்தனியாக ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று InstaClean இல் பணிபுரியும் ஆண்ட்ரியா கூறினார்.