பெங்களூரு கேப் டிரைவர் சரளமாக சமஸ்கிருதம் பேசும் வீடியோ  இணையத்தில் வைரலாக பரவி வருகிறது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமஸ்கிருதம் (Sanskrit), அல்லது சங்கதம் என்பது இந்தியாவின், மிகப்பழைய மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழியையும் பாகத மொழிகளையும் வடமொழி என்ற பொதுப்பெயரிலும் அழைப்பர். இது இந்தோ ஆரிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது. இது தற்போது பெரும்பாலும் பொது பேச்சு வழக்கில் இல்லாத மொழியாகும். இந்தியாவில், உத்தராகண்ட் மாநிலம் வடமொழியை இரண்டாம் அலுவலக மொழியாகக் கொண்டுள்ளது. தற்போது கர்நாடகா மாநிலத்தில், சிமோகா அருகே இரண்டு ஊர்களில் அலுவல் மொழியாக உள்ளது. 


சமஸ்கிருதத்தில் சரளமாக பேசும் ஒரு கேப் டிரைவரின் வீடியோ கடந்த செய்வாய்கிழமையில் இருந்து ட்விட்டர் வாயிலாக சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. சுமார் 45 நிமிடம் கொண்ட இந்த வீடியோவில் அந்த கார் ஓட்டுனர் தனது பயணிகளுடன் சரளமாக சமஸ்கிருதத்தில் உரையாடுகிறார். இந்த வீடியோவை, கிரிஷ் பாரத்வாஜா என்பவர் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதன் உயிர் ஒரு தொழிலதிபர் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் இருந்து அவரை விவரிக்கிறது.


இதோ அந்த வீடியோ பதிவு: 



இந்த வீடியோவை பதிவிட்ட சில மணி நேரத்திலேயே, இந்த வீடியோவை 2,500 தடவை ரீ-ட்வீட் செய்துள்ளனர். மேலும், 6,700 பேர் தங்களின் விருப்பத்தையும் தெரிவித்துள்ளனர். தனது சரளமான சமஸ்கிருத உரையாடலால் இணையத்தை தன பக்கம் கவர்திளுத்துள்ளார் பெங்களூர் கார் ஓட்டுனர். 






" உங்களது சரளமாக உரையாடல் அழகாக உள்ளது", "நான் உங்களை பற்றி எவ்வளவு பெருமைப்படுகிறேன் அன்புடைய நண்பன் கார் ஓட்டுனர் ஜி! நீ என்னை ஊக்கப்படுத்துகிறீர்கள்!" மற்றும் "என்னால் நம்பவே முடியவில்லை! அருமை!"... என பலரும் இவரை புகழ்ந்து இணைய தளத்தில் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். அதில் சில கருத்துக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  



கருத்திட்ட பயனர்களில் ஒருவர், உண்மையில், பாடநூல் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக சமஸ்கிருதத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்று அவர் கருதினார். மேலும், "வாவ் .. இது தேவர்களின் குரல்!" நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?.. எனவும் இவரின் உடையாடலில் மதிமயங்கி கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். 


இந்து சமயத்தின் நான்கு வேதங்கள், பல சமய நூல்கள் உட்பட ஏராளமான தொன்மையான இந்திய இலக்கியங்கள் இம்மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. இந்தியாவின் அலுவல் மொழிகள் பதினைந்தில் இதுவும் ஒன்றாகும். இந்தி, வங்காளி, குஜராத்தி, மராத்தி, காசுமீரி, அரியான்வி, நேபாளி, ஒரியா, கொங்கணி, மைத்திலி, சிந்தி, பஞ்சாபி, உருது முதலிய மேம்பட்ட வட இந்திய மொழிகள் பலவற்றுக்கும் இதுவே மூல மொழியாகக் கருதப்படுகின்றது. கல்வி நிலையங்களில் அதிகாரப்பூர்வ மொழியாக எந்த மொழியை அறிவிக்க வேண்டும்? என்ற விவாதம் சமீப காலமாகவே அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.