மிகச்சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள்: தினமும் 1.5GB-ஐ விட அதிக தரவு, இன்னும் பல நன்மைகள்
உங்களுக்காகவே குறைந்த செலவில், மாதம் முழுதும் உங்களுக்குத் தேவையான தரவு முழுமையாக கிடைக்கும் சில அட்டகாசமான ரீசார்ஜ் திட்டங்களைப் பற்றி இங்கே காணலாம்.
புதுடெல்லி: உலகம் முழுவதும் தொற்றின் பிடியில் சிக்கிக்கொண்டுள்ளதால், மக்கள் வீட்டிலிருந்தே தங்கள் அலுவலகப் பணிகளை செய்து வருகிறார்கள். ஆகையால் அனைவருக்கும் அதிகப்படியான தருவு தேவைப்படுகிறது.
இந்த தேவையைப் புரிந்துகொண்டுள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல மலிவான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கின்றன. நீங்களும் உங்கள் மொபைல் டேட்டாவை பயன்படுத்தி உங்கள் பணிகளை ஆன்லைனில் செய்தால், நீங்கள் வழக்கமாகப் பெறும் தரவு உங்கள் தேவையை பூர்த்தி செய்யாமல் போகலாம்.
உங்களுக்காகவே குறைந்த செலவில், மாதம் முழுதும் உங்களுக்கு தேவையான தரவு முழுமையாக கிடைக்கும் சில அட்டகாசமான ரீசார்ஜ் திட்டங்களைப் பற்றி இங்கே காணலாம். இவற்றில் உங்களுக்கு, பிரீமியம் செயலிகள், இலவச அழைப்பு மற்றும் 1.5 ஜிபிக்கு மேலான தரவு ஆகியவை கிடைக்கும்.
ஜியோவின் ரீசார்ஜ் திட்டம்
ஜியோவின் (Jio) இந்த ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 2 ஜிபி தரவு கிடைக்கும். மேலும், பயனர்கள் அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்பை மேற்கொள்ள முடியும். இது தவிர, பயனர்களுக்கு ஜியோ நியூஸ் மற்றும் ஜியோ சினிமா போன்ற செயலிகளின் சந்தாவும் திட்டத்துடன் வழங்கப்படும்.
ALSO READ: Reliance Jio, Airtel மற்றும் Vodafone-Idea சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள், முழு விவரம் இங்கே!
ஏர்டெலின் ரீசார்ஜ் திட்டம்
ஏர்டெல்லின் (Airtel) இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில், தினமும் 100 எஸ்எம்எஸ் உடன் 2 ஜிபி தரவும் பயனர்களுக்குக் கிடைக்கும். மேலும், அனைத்து நெட்வொர்க்கிலும் வரம்பற்ற அழைப்பையும் பயனர்கள் மேற்கொள்ளலாம். இது தவிர, பயனர்கள் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் மற்றும் விங்க் மியூசிக் சந்தாவையும் இத்திட்டத்துடன் பெறுவார்கள். இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டம்
பிஎஸ்என்எல்லின் இந்த தரவு திட்டத்தின் விலை ரூ .187 ஆகும். இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கிறது. மேலும், பயனர்கள் எந்த நெட்வொர்க்கிலும் வரம்பற்ற அழைப்பை மேற்கொள்ள முடியும். இருப்பினும், இந்த திட்டத்துடன் OTT செயலிகளின் சந்தா கிடைக்காது.
வோடபோன் ஐடியா ரீசார்ஜ் திட்டம்
வோடாபோன்-ஐடியாவின் (Vi) இந்த ப்ரீபெய்ட் திட்டம் 56 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். மேலும், பயனர்கள் எந்த நெட்வொர்க்கிலும் வரம்பற்ற அழைப்பை மேற்கொள்ள முடியும். இது தவிர, பயனர்களுக்கு ZEE5, லைவ் டிவி மற்றும் வார இறுதி டேட்டா ரோல்ஓவர் வசதி ஆகியவையும் வழங்கப்படும்.
ALSO READ: Jio அதிரடி: 1 ரூபாயில் 56 GB 4G இணைய வசதி, 28 நாள் வேலிடிட்டி, முந்துங்கள்!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR