அன்றாடம் எதிர்பாராமல் பல செலவுகள் வந்து நமது இருப்பை கரைத்து விடுகிறது, இதனால் பணவீக்கம் ஏற்பட்டு அடுத்த மாதம் சம்பளம் வரும் வரை காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகிறது.  இத்தகைய சூழலை சமாளித்து தற்காலிக நிதித்தேவையை பூர்த்தி செய்ய சில கேஷ் அட்வான்ஸ் ஆப்ஸ்கள் பயன்படுகின்றன.  இந்த ஆப்ஸ்கள் மூலம் கடன்களை பெற சில தகுதிகள் உள்ளன.  அவையாவன, விண்ணப்பிக்கும் நபர் 18 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும், அமெரிக்காவை சேர்ந்தவராக இருக்க வேண்டும், வருமானம், முகவரி, போன்ற முக்கிய அடையாளங்களை சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டும்.  தற்போது இந்த 2022-ல் மக்களின் தற்காலிகமான நிதித்தேவைக்கு உதவும் சிறப்பான 5 ஆப்ஸ்களை இங்கு பார்க்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | ஜூலை முதல் மத்திய ஊழியர்களின் DA உயரும், எவ்வளவு உயரும்


1) விவோ பேடே லோன் :


சிறந்த பேடே லோன் ஆபிஸிற்கான சிறந்த தேர்வுகளில் ஒன்றுதான் இந்த  விவோ பேடே லோன்.  குறுகிய கால கடன்களை இது வழங்குகிறது, இந்த கடன் நாம் சம்பளம் பெரும் வரை கையில் இருக்கும்.  விவோ பேடே லோன்களின் பேடே லோன் ஆப் போர்டல் மூலம் கிடைக்கிறது, இது $5000 வரையில் நிதியினை வழங்குகிறது.  24 மாத தவணை காலத்துடன் ஏபிஆர் 5.99% முதல் 35.99% உள்ளது, மேலும் இதில் விண்ணப்ப செயல்முறை முழுவதும் ஆன்லைனில் உள்ளது.  ஆனால் இது பல மாநிலங்களில் செயல்பாட்டில் இல்லை.


2) ஹார்ட் பேடேஸ் :


விரைவான பேடே லோன் பயன்பாடுகளை ஒப்பிடும்போது ஹார்ட் பேடேஸ் ஒரு சிறந்த தேர்வாகும்.  விவோ பேடே லோன்களை போலவே ஹார்ட் பேடேஸ் லோன்களை நாம் ஆன்லைன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.  கிரெடிட் செக் இல்லாமல் $5000 வரையிலான நிதியை அளிக்கிறது.  இதன் ஏபிஆர் 5.99% வரை குறைவாக இருக்கும்.  இதன் மூலம் பெறப்பட்ட கடன்களை 24 மாத காலங்கள் வரை திருப்பி செலுத்தலாம்.  மோசமான கிரெடிட் மதிப்பெண்கள் கொண்டவர்களுக்கும் இது கடன்களை வழங்குகிறது.  ஆனால் இது பல மாநிலங்களில் செயல்பாட்டில் இல்லை.


3) கிரெடிட் க்ளாக் :


டேவ் போன்ற கேஷ் அட்வான்ஸ் ஆப்ஸை போலவே கிரெடிட் க்ளாக் ஆப்ஸ் சம்பளம் வாங்கும் நாள் வரையிலும் $1000 வரையிலான விரைவான கடன்களை வழங்கும் சிறந்த பயன்பாடுகளில் ஒன்றாகும்.  இதில் விண்ணப்பிக்கும்போது கட்டணங்கள் எதுவும் வசூலிக்கப்படாது.கடன்களை திருப்பி செலுத்தும் காலம் 3-6 மாதங்கள் வரையிலும், ஏபிஆர் 5.99% முதல் 35.99% வரை இருக்கும்.  இதுவும் மற்ற ஆப்ஸாக்களை போலவே ஆன்லைன் தளமாகும், விண்ணப்பங்கள் ஆன்லைனிலேயே சரிபார்க்கப்படும்.  


4) மனி லெண்டர் ஸ்குவாட் :


இது ஒரு நம்பகமான, சிறந்த மற்றும் உடனடி கடன் வழங்கும் சிறந்த பயன்பாடுகளில் ஒன்றுதான் மனி லெண்டர் ஸ்குவாட்.  இதன் மூலம் மக்கள் $100 முதல் $5000 வரையிலும் கடன்களை பெற்றுக்கொள்ளலாம்.  இதிலும் கடனுக்காக விண்ணப்பிக்க கட்டணங்கள் எதுவும் வசூலிக்கப்படாது.  மோசமான கிரெடிட் மதிப்பெண்கள் வைத்திருப்பவர்கள், வேலையில்லாதவர்கள் என்று யாருக்கும் இது பாகுபாடு காட்டுவதில்லை.  


5) வெரி மெரி லோன் :


வெரி மெரி லோன்கள் ஒரு சிறந்த கேஷ் அட்வான்ஸ் ஆப் ஆகும்.  ஏபிஆர் அளவுகள் மற்றும் லோன்களை திருப்பி செலுத்தும் கால அளவு போன்றவற்றை எளிமையான கடன் கட்டமைப்பு கால்குலேட்டருடன் வழங்குகிறது.  கிரெடிட் செக் இல்லாமலா வெரி மெரி லோன்கள் சில நிமிடங்களில் கடன்களை வழங்குகிறது.  இதன் ஏபிஆர் 5.99% வரை குறைவாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இது சந்தேகத்திற்கு இடமின்றி சிறந்த பேடே லோன் ஆப்ஸ்களில் ஒன்றாகும்.


மேலும் படிக்க | ஒரே மாதத்தில் மூன்றாவது முறையாக வீட்டுக்கடன் வட்டியை உயர்த்திய HDFC!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR