இன்றைய காலகட்டத்தில் கடன் வாங்குவது கடினமான காரியம் அல்ல. உங்கள் ஆவணங்கள் சரியாக இருந்தால் கூட கடன் எளிதாகக் கிடைப்பதில்லை. அதேநேரத்தில் ஆவணங்கள் இல்லையென்றால் கடன் பற்றி நீங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாது. கொஞ்சம் தாமதமானாலும் ஆவணங்கள் இருந்தால் கடன் வாங்கிவிடலாம். பான் கார்டுக்கு வழியாக கூட நீங்கள் கடன் பெற முடியும். தனிநபர் கடனைப் பெற வேண்டும் என்றால், வாடிக்கையாளர்கள் சில ஆவணங்களை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டில் எந்த வகையான நிதி பரிவர்த்தனைக்கும் பான் கார்டு கட்டாயம். பான் கார்டு என்பது நிரந்தர 10 இலக்க எண். இது வருமான வரித்துறையால் வழங்கப்படுகிறது. பான் கார்டு இல்லாமல் வங்கிகளில் இருந்து பெரிய அளவில் பணம் எடுக்க முடியாது. ஆனால் பான் கார்டில் வங்கிகளில் கடன் பெறலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இன்றைய காலகட்டத்தில் நமது அடையாளத்தின் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்று பான் கார்டு. இது இல்லாமல், நீங்கள் வங்கிக் கணக்கைத் திறக்கவோ அல்லது வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யவோ முடியாது.


மேலும் படிக்க | Post Office Scheme: தினசரி ரூ.50 முதலீடு செய்தால் ரூ.35 லட்சம் வரை பெறலாம்!


பான் கார்டில் கடன் பெறுவது எப்படி?


பெரும்பாலான வங்கிகள் பான் கார்டுகளில் ரூ.50,000 வரை கடன் வழங்குகின்றன. பான் கார்டுக்கு கடன் கொடுப்பதற்கு முன், எந்தவொரு வங்கியும் அல்லது NBFC வாடிக்கையாளர்களின் CIBIL ஸ்கோரை சரிபார்க்கும். இதிலிருந்து வாடிக்கையாளரின் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் உள்ள நிறைகுறைகளை தெரிந்து கொள்ள முடியும். 


எவ்வளவு ரூபாய் பெறலாம்


உங்கள் பான் கார்டு மூலம் ரூ.50,000 வரை தனிநபர் கடனை எளிதாகப் பெறலாம். 50,000 வரை எந்தப் பத்திரமும் இல்லாமல் வங்கிகள் கடன் தருகின்றன. அதாவது, நீங்கள் எதையும் வங்கியில் அடமானம் வைக்க வேண்டியதில்லை. இருப்பினும், உங்கள் CIBIL மதிப்பெண் நன்றாக இருக்க வேண்டும். அப்போதுதான் இந்தக் கடனைப் பெற முடியும். தனிநபர் கடனின் வட்டி விகிதம் வீட்டுக் கடன், கார் கடனை விட அதிகமாக உள்ளது, மேலும் இது பாதுகாப்பற்ற வகையின் கீழ் வரும். இதன்காரணமாக, வங்கிகள் பான் கார்டு மூலம் அதிக தொகையை கடனாக வழங்குவதில்லை.


இந்த ஆவணம் அவசியம்


உங்கள் பான் கார்டுக்கு எதிராக தனிநபர் கடன் வாங்க விரும்பினால், சில ஆவணங்களை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். இதில் உங்கள் பணி அனுபவமும் அடங்கும். உங்களின் பணி அனுபவம் குறைந்தது இரண்டு வருடங்கள் இருந்தால் மட்டுமே பான் கார்டில் தனிநபர் கடனைப் பெறுவீர்கள். நீங்கள் வேலை அல்லது வணிகம் செய்து கொண்டிருந்தால் மட்டுமே, பான் கார்டில் தனிநபர் கடனைப் பெற முடியும்.


மேலும் படிக்க | நாள் ஒன்றுக்கு 4,000 ரூபாய் சம்பளம் - மத்திய அரசு வேலை ரெடி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ