நாள் ஒன்றுக்கு 4,000 ரூபாய் சம்பளம் - மத்திய அரசு வேலை ரெடி

மத்திய அரசு வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாள் ஒன்றுக்கு 4,000 ரூபாய் சம்பளம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Aug 12, 2022, 01:48 PM IST
  • கல்வி ஆலோசகர்கள் இந்தியா லிமிடெட்டில் வேலை வாய்ப்பு
  • நாள் ஒன்றுக்கு 4,000 ரூபாய்வரை ஊதியம்
  • ஆகஸ்ட் 20ஆம் தேதி விண்ணப்பிப்பதற்கு கடைசி நாளாகும்
நாள் ஒன்றுக்கு 4,000 ரூபாய் சம்பளம் - மத்திய அரசு வேலை ரெடி title=

கல்வி ஆலோசகர்கள் இந்தியா லிமிடெட் (EdCIL)ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Observers பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

காலிப் பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Observers பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கல்வி தகுதி:

Observers பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduation, Post Graduation, Ph.D என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

31.05.2022ம் தேதியின்படி இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.2,500 முதல் ரூ.4000வரை தினசரி ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் https://www.edcilindia.co.in/ECareers என்ற தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பணிக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 20ஆம் தேதி கடைசி நாளாகும்.

மேலும் படிக்க | பிரசார் பார்தியில் டிகிரி படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!

மேலும் படிக்க | 8th Pay Commission: அடுத்த ஊதியக்கமிஷன் வருமா, வராதா? முக்கிய அப்டேட் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News