காதல் உறவின் சரங்கள் மிகவும் மென்மையானவை. இதில் ஒரு தவறு செய்தால் இந்த உறவில் பல சிக்கல்கள் உருவாகும். மகிழ்ச்சியாக சென்றுக்கொண்டு இருக்கும் வாழ்க்கையில், சில விஷயங்கள் காரணமாக இருவருக்குமான உறவு ஸ்தம்பிக்கும் மற்றும் பிரிந்துபோகும் சூழல் ஏற்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் குறித்து நீங்கள் அடிக்கடி பார்க்கலாம், கேட்கலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் வாழ்க்கை துணையிடம் நீங்கள் என்ன பேசவேண்டும் என்பதில் கவனிம் செலுத்துவேண்டியது முக்கியம். இன்று இந்த அத்தியாயத்தில் உங்கள் கூட்டாளருடன் நீங்கள் பேசக்கூடாத சில விஷயங்களைப் பற்றி நாங்கள் உங்களுக்குச் சொல்லப் போகிறோம். இந்த விஷயங்கள் உங்கள் வாழ்க்கை துணையுடனான மகிழ்ச்சியான உறவை கெடுத்துவிடும். எனவே இந்த விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னாள் காதலைப் பற்றி பேச வேண்டாம்:
உங்கள் முன்னாள் காதலியைப் பற்றி உங்கள் புதிய காதலி/காதலரிடம் சொல்லக்கூடாது என்பதை நினைவில் கொள்க. ஏனென்றால் நீங்கள் உங்கள் முன்னாள் காதலியுடன் எக்காரணத்திற்காக பிரிந்தீர்கள், அதில் உங்கள் தவறு  இல்லை என்றாலும் சரி, ஆனால், உங்கள் முன்னாள் காதலியை பிரிந்தது பற்றி கூறினால், தற்போதைய பார்ட்னர் என்னையும் இவர் விட்டுவிடுவாரா என்று நினைக்கலாம்.


ALSO READ |  உண்மையில் உடலுறவு மன அழுத்தத்தைக் குறைக்குமா? - நிபுணர் கூறுவது என்ன?


மாமனார் மாமியாரை குறை பேசாதீர்கள்:
திருமணத்திற்குப் பிறகு, மாமியாரோடு பரஸ்பர புரிதலை உருவாக்க நேரம் எடுக்கும். ஆரம்பத்தில் அவர்களின் சில பழக்கவழக்கங்கள் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், அத்தகைய சூழ்நிலையில், மாமனார் மாமியாரை அமைதியாகப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். ஆனால் தவறுதலாக கூட, உங்கள் துணைவியாரின் பெற்றோரை பற்றி குற்றம் சொல்லாதீர்கள். ஏனென்றால் எந்த பெண்ணும் தன் பெற்றோரின் மீதான குறைகளைக் கேட்க முடியாது. எனவே, உங்கள் மாமியார் மாமனார் தொடர்பான விஷயத்தை உங்களிடமே இருக்கட்டும். அதைப் பற்றி உங்கள் மனையிடம் பேசாதீர்கள்.


இதுதான் என கட்டாயப்படுத்தக்கூடாது:
பலருக்கு தங்களை நன்றாகவும் அழகாவும் வைத்துக்கொள்ளும் பழக்கம் உள்ளது. தினம் தினம் நல்ல ஆடைகளை அணிந்து இருக்க வேண்டும் என விரும்புவார்கள். மறுபுறம், உங்கள் மனைவியார் உங்களுக்கு பிடித்த ஆடை அணியவில்லை அல்லது அவர்கள் விரும்பும் ஆடைகளை அணிந்திருந்தால், இதுபோன்ற சூழ்நிலையில், நீங்கள் இதைதான் அணிய வேண்டும் என்று நீங்கள் அவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது. இந்த உடையில் நீங்கள் அழகாக இல்லை, உங்களை மாற்றிக் கொள்ளுங்கள் எனக்கூறும் போது, இந்த விஷயங்கள் உங்கள் பார்ட்னருக்கு கவலையை ஏற்படுத்தலாம். அது அவர்களுக்கு மோசமாகத் தோன்றலாம். ஏனென்றால் காதல் என்பது உங்களுக்காக ஒருவரை மாற்றும்படி கட்டாயப்படுத்துவது அல்ல, மாறாக நீங்கள் எதை உடுத்தினாலும் அழகா இருக்கிறது என அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதே காதல்.


ALSO READ |  நட்பின் ரீதியில் உறவை முடிக்க இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்


புகழ்ந்து கொள்ளாதீர்கள்:
பலருக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. அவர்கள் தங்கள் செய்த நல்ல காரியங்களை குறித்து தங்களை தாங்களே புகழ்ந்து பேசத் தொடங்குகிறார்கள். அதே நேரத்தில், அவர்கள் தங்கள் துணைவியார் முன் இதைச் செய்கிறார்கள். இதைச் செய்வதன் மூலம், உங்களைப் பற்றிய ஒரு நல்ல பிம்பத்தை உருவாக்க நீங்கள் இதையெல்லாம் செய்கிறீர்கள் என்று உங்கள் துணைவியார் உணரலாம். எனவே உங்களைப் புகழ்ந்து கொள்ளாதீர்கள். வேறு யாராவது அதைச் செய்யட்டும்.


பழைய செக்ஸ் வாழ்க்கை பற்றி பேசாதீர்கள்:
உங்கள் துணைவி பாலியல் சம்பந்தமாக வெளிப்படையாக உங்களிடம் பேசுகிறார்கள். உடல் ரீதியான உறவின் போது சில விசியங்கள் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், அதைப் பற்றி அவர்களிடம் பேசாதீர்கள். உங்கள் துணைவியார் உங்களைப் பற்றி மோசமாக உணரலாம். இது தவிர, உங்கள் பழைய பாலியல் வாழ்க்கை பற்றி உங்கள் மனைவியிடம் பேசாதீர்கள். இது உங்கள் உறவில் தூரத்தை அதிகரிக்கும். 


ALSO READ |  ஒரு ஆண்டுக்கு எத்தனை முறை உடலுறவு கொள்வது நல்லது - இதோ பதில்..!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR