ஜாக்கிரதை: COVID-19 வைரஸ் நரம்பணுக்களை பாதிக்கும், மூளை செல்களை சேதப்படுத்தும்!
எலி மற்றும் மனித மூளை திசு இரண்டையும் பயன்படுத்திய மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கோவிட் -19 வைரஸ், மைய நரம்பு மண்டலம் உட்பட உடலில் உள்ள பல உறுப்புகளில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதைக் காட்டுகிறது.
Beware of COVID-19: கோவிட் -19 தொற்று காரணமான SARS-CoV-2- வைரஸ் மத்திய நரம்பு மண்டலத்தை நேரடியாக பாதிக்கக்கூடும் என்பது மட்டுமில்லாமல், மூளையின் இரத்த நாளங்களில் பல மாற்றங்களையும் ஏற்படுத்தக்கூடும். இந்த மாற்றதால், உங்கள் மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜன் அளவு சீர்குலைக்கக்கூடும் என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
கோவிட் -19 வைரசான SARS-CoV-2 பல உடல் உறுப்புகளை பாதிக்கும் (SARS-CoV-2 Can Affect Many Organs)
எலி மற்றும் மனித மூளை திசு இரண்டையும் பயன்படுத்திய மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கோவிட் -19 வைரஸ் (COVID-19), மைய நரம்பு மண்டலம் உட்பட உடலில் உள்ள பல உறுப்புகளில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதைக் காட்டுகிறது.
கொரோனா நோயாளிகளுக்கு பின்வரும் அறிகுறிகள் இருக்கும் (Corona Symptoms)
தலைவலி, சுவை மற்றும் வாசனையை உணர்வு குறையும். மயக்கம், பக்கவாதம் ஏற்படும். மூளை இரத்தப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
ALSO READ | கர்ப்பிணிப் பெண்களுக்கு COVID தடுப்பூசி போடத்தடை விதித்து அரசு உத்தரவு!
ஊடகங்களுடன் பேசிய ஆராய்ச்சியாளர்கள், வைரஸ் வீரியத்தின் முழு அளவைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், நோயாளிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிப்பது முக்கியமானது. ஏனெனில் கோவிட் -19 இன் நீண்டகால விளைவுகளைக் கண்டுபிடிக்க தற்போது முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதில் பல விளைவுகள் மத்திய நரம்பு மண்டல சம்பந்தப்பட்டவை என்று கணிக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்கள்.
SARS-CoV-2 வைரஸ் நரம்பணுக்களை எவ்வாறு பாதிக்கிறது? (How does the SARS-CoV-2 virus affect neurons?)
ஆய்வுக்காக, மனித மூளை ஆர்கானாய்டுகளை (Organoids) கொரோனா வைரஸ் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என குழு ஆய்வு செய்தது.
ALSO READ | உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க புதிய வழிகாட்டுதலை வெளியிட்ட WHO!
அதன்படி, இந்த ஆர்கானாய்டுகளில் உள்ள நியூரான் செல்கள் (Neurons) வைரசால் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தது. நியூரான் செல்கள் பாதிக்கப்படுவதால் ஆக்ஸிஜன் சப்ளை குறைந்து நரம்பணுக்கள் இறக்கின்றன.
கோவிட் -19 நுரையீரலுக்குள் நுழைந்த பிறகு என்ன செய்கிறது? (What does Covit-19 do after entering the lungs?)
SARS-CoV-2 வைரஸ் ACE2 எனப்படும் புரதத்துடன் கலப்பது மூலம் நுரையீரல் செல்களுக்குள் நுழைகிறது. ஆனால் இந்த புரதம் மூளை உயிரணுக்களின் மேற்பரப்பில் இருக்கிறதா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. ACE2 புரதம் நரம்பணுக்கள் மூலம் உருவாகிறது.
மூளையின் இரத்த நாளங்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் கோவிட் -19:
SARS-CoV-2 வைரஸ் ஆனது மனித ACE2 ஐ உருவாக்க மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட எலிகளின் மூளையை பாதிக்க முடிந்தது. இதனால் மூளையின் இரத்த நாளங்களில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதன் மூலம் உறுப்புகளுக்கு செல்லும் ஆக்ஸிஜன் விநியோகத்தை பாதிக்கக்கூடும் என்று குழு தெரிவித்துள்ளது.
ALSO READ | மனிதர்களுக்கும் மட்டுமல்ல, கொரில்லாக்களுக்கும் ஆபத்தாகிறதா Corona?
கோவிட் -19 வைரசுக்கு பலியான மூன்று நோயாளிகளின் மூளைகளையும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.
இந்த நோயாளிகளில் ஒருவரின் கார்டிகல் நியூரான்களில் SARS-CoV-2 கண்டறியப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட மூளைப் பகுதிகள் இஸ்கிமிக் இன்ஃபார்க்ட்ஸுடன் தொடர்புடையன. அதாவது இரத்த ஓட்டத்தை குறைப்பதால், திசு சேதம் அடைந்து, நரம்பணு செல்கள் இறக்கும் நிலையை ஏற்படுத்துகிறது. மூன்று நோயாளிகளின் மூளை பிரேத பரிசோதனையில் மைக்ரோ இன்ஃபார்க்ஸ் (Microinfarcts) கண்டறியப்பட்டது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR