குழந்தையை வைத்துக்கொண்டு 40KM வேகத்தில் பைக் ஓட்டினால் அபராதம் -ALERT
New Traffic Rules: குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்ற புதிய போக்குவரத்து விதிகள் குறித்து எச்சரிக்கை
New Traffic Rules: நான்கு வயதுக் குழந்தையை பைக்கில் உட்கார வைத்து மணிக்கு 40 கி.மீ வேகத்தில் ஓட்டிக்கொண்டு சென்றால், அது உங்களுக்கு பெரும் விலையாகப் போகிறது. இனி இதுபோன்ற செயல்களில் எடுயாப்ட வேண்டாம். புதிய விதியின்படி, இது போக்குவரத்து விதி மீறலாக கருதப்பட்டு, அபராதம் தொகை உங்களிடம் வசூலிக்கப்படும்.
குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சாலை போக்குவரத்து அமைச்சகம் இது தொடர்பான புதிய சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. பைக்கில் பின்னால் அமர்ந்திருக்கும் குழந்தைகளுக்காக இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், 0 வயது முதல் 4 வயது வரையிலான குழந்தைகளை இருசக்கர வாகனங்களில் அழைத்து செல்லும் போது அவர்களுக்கு பாதுகாப்புக் கவசம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அதாவது இனிமேல் குழந்தைகளுக்கும் ஹெல்மெட் அணிய வேண்டும்.
போக்குவரத்துச் சட்டத்தின்படி, நான்கு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் பைக்கில் அமர்ந்தால், அது ஒரு சவாரியாகக் கருதப்படும், அதாவது, இரண்டு பேருடன் சேர்ந்து ஒரு குழந்தை அமர்ந்தால், அது மூன்று நபர்களாக கருதப்படும். இதற்காக உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இந்த சட்டத்தை மீறினால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இது தவிர, ஒரு ஆணும் மற்றும் குழந்தை பைக்கில் அமர்ந்திருந்தால், பாதுகாப்பு தரங்களை கவனித்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில், அதன் மீறலுக்கு நீங்கள் அபராதம் செலுத்த வேண்டும்.
ALSO READ | ALERT! போக்குவரத்து விதிகளில் மாற்றம்: மின்னணு முறையில் கண்காணிப்பு
விபத்துகளால் குழந்தைகள் உயிரிழப்பது அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு சாலை அமைச்சகம் இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதனால் குழந்தைகள் பைக்கில் பயணிக்கும் போது பாதுகாப்பு உறுதி செய்யபப்டுவதுடன் அவர்களின் உயிரையும் காப்பாற்ற முடியும்.
இது தவிர, பைக் ஓட்டுபவர் குழந்தை தன்னுடன் அமர்ந்திருந்தால், மணிக்கு 40 கிலோமீட்டருக்கு மேல் வேகத்தில் ஓட்ட முடியாது என்பதையும் உறுதி செய்ய வேண்டும். இல்லை என்றால் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள்.
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் போக்குவரத்து ஆராய்ச்சி பிரிவின் படி, 2019 ஆம் ஆண்டில் குறைந்தது 11,168 குழந்தைகள் சாலை விபத்துக்களில் இறந்துள்ளனர், அதாவது ஒவ்வொரு நாளும் 31 குழந்தைகள் இறந்துள்ளனர். 2018 உடன் ஒப்பிடும்போது குழந்தை இறப்புகளில் 11.94 சதவீதம் அல்லது 1,191 அதிகரித்துள்ளது.
ALSO READ | வாகனம் ஓட்டும்போது மொபைலில் Google Map பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படலாம்
குழந்தைகளின் எதிர்காலம் மிக முக்கியம் என்பதால், சரியான நடவடிக்கை எடுத்து அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று பல நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR