ALERT! ரயில் பயணத்தின் போது உங்கள் ரயில் டிக்கெட்டை யாரெல்லாம் செக் பண்ண முடியாது
உங்கள் டிக்கெட்டை சோதனை செய்வதற்கான விதிகளும் (Railway Ticket Checking Rules) உள்ளன. ரயிலில் பயணம் செய்யும்போது உங்கள் டிக்கெட்டை யார் சரிபார்க்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த விதியைக் குறித்தது தெரிந்துக்கொள்ளுங்கள்.
இந்திய இரயில்வே செய்திகள்: நாட்டில் இரண்டாவது அலை குறைந்ததால் பல ரயில்களை இயக்க இந்திய ரயில்வே முடிவு செய்துளள்ளது. இந்திய போக்குவரத்தின் உயிர்நாடி என்றும் ரயில்வே அழைக்கப்படுகிறது. ரயில்வே நெட்வொர்க் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் உள்ளது.உங்கள் டிக்கெட்டை சோதனை செய்வதற்கான விதிகளும் (Railway Ticket Checking Rules) உள்ளன. ரயிலில் பயணம் செய்யும்போது உங்கள் டிக்கெட்டை யார் சரிபார்க்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த விதியைக் குறித்தது தெரிந்துக்கொள்ளுங்கள்.
டிக்கெட் சோதனை ஊழியர்களுக்கு மட்டுமே உரிமை:
உங்கள் டிக்கெட்டை டிக்கெட் சோதனை ஊழியர்கள் தவிர வேறு யாரும் சரிபார்க்க முடியாது. பயணிகளின் டிக்கெட் (Passengers Tickets) சரிபார்க்கும் உரிமை ரயில்வே துறையால TTE-க்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, டிக்கெட்டுகள் உங்களிடம் இல்லையென்றால் அபராதம் விதிக்க TTE க்கு மட்டுமே உரிமை உண்டு. அதாவது சில நேரங்களில் பயணிகள் டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்கிறார்கள். இது தவறு, இது தவிர்க்கப்பட வேண்டும். ஆனால், யாராவது அவ்வாறு பயணம் செய்தால், அபராதம் விதிக்கும் அதிகாரம் டிக்கெட் சோதனை ஊழியர்களுக்கு மட்டுமே உள்ளது. அவசரமாக டிக்கெட் எடுக்க மறந்துவிட்டால், TTE-யிடம் பேசி அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட்டைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
ALSO READ | ரயிலில் பயணம் செய்யும் முன்பு, முதலில் இந்த பட்டியலை சரிபார்த்துக் கொள்ளவும்
போலீசாருக்கு அபராதம் விதிக்க உரிமை இல்லை:
சில நேரங்களில் ரயில்வே போலீஸ் படை (Railway Police Force) போலீசார் உங்கள் டிக்கெட்டைச் சரிபார்கள். உங்களிடம் டிக்கெட் இல்லாதபோது மிரட்டி பணம் பறிப்பதும் நடக்கிறது. அப்படி ஒரு சம்பவம் உங்களுக்கு நடந்தால், நீங்கள் பயத்தில் ஆர்பிஎஃப் போலீசாரிடம் பணம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இந்த சம்பவம் குறித்து மூத்த அதிகாரியிடம் புகார் செய்யவும். ரயில்வே விதிகளின்படி (Railway Rules), ஒரு ஆர்பிஎஃப் போலீஸ்காரர் அவ்வாறு பிடிபட்டால், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவரை சஸ்பெண்ட் செய்யலாம். மாஜிஸ்திரேட் ரெய்டின் போது மட்டுமே போலீசார் டிக்கெட்டை சரிபார்க்கலாம். ஆனால், அந்த நேரத்தில் கூட, போலீசாருக்கு அபராதம் விதிக்க உரிமை இல்லை.
ரயில் டிக்கெட் இல்லாமல் நீங்கள் ரயிலில் ஏறிவிட்டால், அதுபோன்ற நேரத்தில் முதலில், TTE உதவியுடன் அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட்டை வாங்கிக்கொள்ளுங்கள்.
டிக்கெட் பரிமாற்ற வசதி:
ரயில்வே விதிகளின்படி, ரயிலில் பயணம் செய்வதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு, எந்தப் பயணியும் தனது டிக்கெட்டை பெற்றோர், கணவன், மனைவி, மகன், மகள், உடன்பிறப்புகள் உட்பட அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயரில் மாற்றிக் கொள்ளலாம். ரயில் பயணிகள் தங்கள் குடும்பத்தில் உள்ள எந்தவொரு உறுப்பினரின் பெயரிலும் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை தங்கள் பெயரில் மாற்றிக் கொள்ளலாம். ரயில்வே அமைச்சகத்தின் 1990 விதியின் அடிப்படையில் 3 ஜூன் 2006 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் (Ticket Transfer Rules) இது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ALSO READ | IRCTC: ஆன்லைன் டிக்கெட் புக்கிங் விதிகளில் முக்கிய மாற்றம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR